பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தி. மூ. நாராயணசாமி பிள்ளை 5 காமல் நினைவு வைத்திருந்தார்கள். இந்தக் காலத்திலும் இவர் வழங்கிய சான்றிதழைப் புதுப்பித்துக் கொண் டேன். 1941 ஜூன் முதல் புதிதாகத் தொடங்கப் பெற்ற துறையூர் உயர்நிலைப் பள்ளி யின் முதல் தலைமையாசிரிய ரானேன். பதவி பெரிது; ஆனால் ஊதியம் மிகமிகக் குறைவு. போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து’ என்ற பழமொழியை மறைமொழிபோல் பாவித்து ஒன்பது ஆண்டுகள் மிகத் திறமையாகப் பணியாற்றி நற்புகழ் ஈட்டினேன். 1948-49 இல் ஒரு வழக்குபற்றி எனக்குச் சென்னைப் பயணம் அடிக்கடி இருந்து வந்தது. இக்காலத்தில் கே.ஆர்’ @r(sr வழங்கப் பெறும் கே. இராமச்சந்திரய்யர்-என் . பள்ளி வாழ்வில் மிகச் சிறு வயதிலே தந்தையை இழந்து பரிதவிக்கும் எனக்கு ஒரு தந்தைபோல் அரவணைத்து ஆதரித்த கணித ஆசிரியர் குளித்தலை உயர்நிலைப் பள்ளித் தலைமை யாசிரியராக ஒய்வு பெற்று-சென்னையில் தி. நகரில் குடியேறி வேப்பேறி கிறித்தவ மகளிர் உயர்நிலைப் பள்ளி ஒன்றில் கணித ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந் தார். அப்பொழுது பிள்ளையவர்கள் சென்னைப் பொதுப் பணியாளர் ஆணையத்தில் உறுப்பினர் பதவியேற்றுக் கீழ்ப்பாக்கம் ஆர்மஸ் சாலையில் ஒரு திருமாளிகையில் குடியிருந்தார்கள். இது 1948 என்பதாக நினைவு. அக் காலத்தில் சட்டக் கல்லூரியில் பேராசிரியராகவும் துணை முதல்வராகவும்பணியாற்றிய திரு.எஸ்.கோவிந்தராஜுலு நாயுடு அவர்களும் இதே சாலையில் குடியிருந்ததாக நினைவு. அவர் இல்லத்திற்கு எதிராகவுள்ள இல்லத்தில் தான் பிள்ளையவர்கள் குடியிருந்தார்கள். திரு.கே.ஆரைப் புருஷகாரமாகக் கொண்டு பிள்ளையவர்களைச் சந்தித் தேன். அக்காலத்தில் தமிழ் வித்துவான் பட்டமும்(1945 , பி. ஏ. பட்டமும் (1947) பெற்றிருந்த எனக்கு-தமிழ் எம்.ஏ. படிக்கவேண்டிய எனக்கு-பி. ஏ. படிக்க வேண்டிய