பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. மலரும் நினைவுகள் நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இதில் தமிழில் பல்கலைக் கழகத் தில் முதல் மாணவனாகவும் தேறியிருந்தேன். திரு பிள்ளையவர்களைச் சந்தித்தபோது பச்சை யப்பன் கல்லூரியில் ஒரு தனிப் பயிற்சி ஆசிரியர் (Tutor) பதவியாவது பெற ஏற்பாடு செய்யுமாறு வேண்டினேன். இதனால் கல்லூரியில் பணியாற்றும் வாய்ப்பு ஏற்படும் என்றும், மேலும் எம். ஏ. பயிலவும் பிஎச். டி. க்கு ஆராய வும் வழி ஏற்படும் என்றும் கருதித்தான் இந்த வேண்டு கோள் விடுத்தேன். 1934-முசிறி உயர்நிலைப் பள்ளியில் ஒரு மாணவனாகவும் 1934-39 இல் திருச்சியில் கல்லூரி மாணவனாகவும் பார்த்த என்னை இப்போது (1948) ஒர் உயர்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியனாகக் காண் கின்றார். என் வளர்ச்சியையும் புலமையையும் காண்இன் றார். மகிழ்ச்சியுடன் என்னை வாழ்த்துகின்றார். * மிஸ்டர் ரெட்டியார், சென்னை வாழ்க்கை வேண்டா, நாட்டுப்புறத்தில் செல்வாக்குடனும் சிறப்புடனும் வாழும். உங்கட்கு நகர வாழ்க்கை வேண்டா; இங்கு வந்த பிறகு சென்னை நகர வாழ்க்கை நரகவாழ்க்கையாக மாறித் தொல்லைப் படுவீர்கள். உணவு கட்டுபாடு (Ration) நடை முறையில் இருக்கும் காலம். ட்யூடர் ஊதியம் உங்கட்குப் போதாது. எம். ஏ.யையும் முடியுங்கள். பிறகு கவனிக்கலாம்.’’ என்று அன்புடன் கூறினார்கள், பிள்ளை யவர்களின் அறிவுரையை ஏற்று மகிழ்வுடன் இல்லம் திரும்பினேன். 1950-ஜூலை முதல் எதிர்பாராத விதத்தில் காரைக் குடி அழகப்பர் ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியர் பதவி கிடைத்தது, 1951-இல் தமிழ் எம்.ஏ. பட்டமும் பெற்று எல்லா வகையிலும் கல்லுரரி வாழ்க்கைக்கு என்னைத் தகுதியாக்கிக் கொண்டேன், இப்பொழுது பிள்ளையவர்கள் பொதுப்பணியாளர்ஆணை யத்தின் தலைவரானார்கள். எனக்கு அளவற்ற மகிழ்ச்சி.