பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தி. மூ . நாராயணசாமி பிள்ளை 7 ஆனால் இக்காலத்தில் திரு. பிள்ளையவர்களிடம் எந்த வித உதவியையும் பெற வேண்டிய இன்றியமையாமை எனக்கு ஏற்படவில்லை. ஏதோ காரியமாகச் சென்னை வந்த நான் திரு. கே. ஆருடன் பிள்ளையவர்களைச் சந்தித்து ஆசி பெற்றேன்; எனக்குக் கல்லூரியில் அலுவல் கிடைத்தமைபற்றிப் பெரிதும் மகிழ்ந்தார்; மேலும் மேலும் உழைப்பினால் உயர வேண்டும் என வாழ்த்தி யருளினார். தலைப்பாகையுடனும் திருமண் தாங்கிய முகப் பொலிவுடனும் திகழ்ந்த பிள்ளையவர்கள் என்னை வாழ்த்தியதைச் சீமந் நாராயணனே வாழ்த்தியதாக மன நிறைவு கொண்டேன். காரைக்குடிக் கல்லூரி வாழ்வு அதிகமான நூல்களைப் படிப்பதற்கும் நூல்களைப் படைப்பதற்கும் வாய்ப்பு களைத் தந்தன. கல்வியியல், கல்வி உளவியல், அணுவியல் துறைகளில் அதிகமான நூல்களைப் பயின்றேன். தமிழ் பயிற்றும் முறை’, ‘அறிவியல் பயிற்றும் முறை கல்வி உளவியல் மானிட உடல்', 'கலிங்கத்துப் பரணி ஆராய்ச்சி', 'அனுவின் ஆக்கம்', 'அணுக்கரு பெளதிகம்’ கவிதையதுபவம் இல்லற நெறி (மருத்துவம்) போன்ற பல துறை நூல்களைப் படைத்துப் பெரும் புகழ் ஈட்டி னேன். என் வாழ்க்கையையும் என் உழைப்பையும் திரும்ப நோக்கும்போது எனக்கே என்னைப்பற்றி ஒருவித பெருமித உணர்வு தோன்றியது. இக்காலத்தில் திரு பிள்ளையவர்கள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரானார்கள். இவர்தம் உயர் பதவியைக் கண்டு எனக்குப் பெரு மகிழ்ச்சி ஏற்பட்டது. பிள்ளையவர் களும் என் உழைப்பையும் ஊக்கத்தையும் கண்டு பெரு மகிழ்ச்சியுற்றார்கள். பிற துறைகளில் நான் எழுதிய நூல் கள் யாவும் பிள்ளையவர்களின் கவனத்தைக் கவர்ந்தன. அந்தந்தத் துறையைச் சார்ந்த பேராசிரியர்கள் செய்ய முடியாதி பணியை நான் செய்தது பற்றி வியந்தார்கள், தவிர நான் பணியாற்றிய கல்லூரி