பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் பாரதிதாசன் I 89. பற்றியும் செய்தியைப் பரப்பினேன். இக்கூட்டத்திற்கு மிக அதிகமான மக்கள் (சுமார் 50 பேர்) திரண்டு வந்திருந் தனர். ஆசிரியப் பெருமக்கள், ஊர் பெருமக்கள், உயர் வகுப்பு மாணவர்கள் ஆகியவர்கள் சேர்ந்த கூட்டம் சுமார் 300 பேருக்கு மேல் தாண்டியது. பேசுவோருக்கு கூட்டத் தின் திரள் உற்சாகத்தை அளிக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. எதுபற்றி வேண்டுமானாலும் கவிஞர் பேசலாம் என்ற சுதந்திரம் உண்டு என்று கூறிவிட்டோம். தமக்கும் பாரதியாருக்கும் நட்பு; தமக்கு இயல்பாகவே இயல், இசை, நாடகம் இவற்றில் ஈடுபாடு இருந்தமை ஆகிய வற்றை விளக்கினர். ஒரு சமயம் கனக. சுப்புரத்தினம் நண்பர் ஒருவரின் திருமணவிருந்திற்குப் போயிருந்தாராம், விருந்திற்கு பாரதியாரும் வந்திருந்தார். விருந்திற்குப் பிறகு கனக சுப்புரத்தினம் ஒரு நாட்டுப் புறப்பாடலைப் பாடினாராம். பாரதியார் அப்பாடலைக் கேட்டுக் கொண் டிருந்ததைச் சுப்புரத்தினம் அறியார். இப்பாடலே இவரைப் பாரதியாருக்கு அறிமுகப்படுத்தியதாகக் கூறினார். ஒரு சமயம் பாரதியார் சுப்பு ரத்தினம் ஒரு கவிஞன்அதற்குரிய தன்மை அவருக்கு உண்டு’ என்ற எண்ணம் பாரதியாருக்கு அவரைக் கண்டபோதே தோன்றியிருக்க வேண்டும். ஒருநாள் நண்பர்களிடம் இதைத் தெரிவிக்க விழைந்தாராம். சுப்புரத்தினம் கவிதை இயற்றவல்லவன்’ என்று அனைவர் நடுவில் கூறினாராம். நண்பர்கள் பாடச் சொல்லுங்கள் பார்ப்போம்' என்று பாரதியாரை வேண்ட, அவரும் தம்பி, ஒரு பாடலைப் பாடிக் காட்டு’ என்றாராம் . உடனே கனக. சுப்புரத்தினமும், எங்கெங்குக் காணினும் சக்தியடா!-தம்பி ஏழுகடல் அவள் வண்ணமடா!-அங்குத் தங்கும் வெளியினில் கோடியண்டம்- அந்தத் தாயின் கைப்பந்தென ஓடுமடா-ஒரு