பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 90 மலரும் நினைவுகள் கங்குவில் எழுமுகி லினமும்- வந்து கர்ச்சனை செய்வது கண்டதுண்டோ?-எனில் மங்கை நகைத்த ஒலியெனலாம்-அவள் மந்த நகையங்கு மின்னுதடா! 口 ü 脏 காளை யொருவன் கவிச்சுவையைக்-கரை காண நினைத்த முழுநினைப்பில்-அன்னை தோளசைத் தங்கு நடம்புரிவாள் - அவன் தொல்லறி வாளர் திறம்பெறுவான்-ஒரு வாளைச் சுழற்றும் விழியினிலே-இந்த வையமுழுவதும் துண்டு செய்வேன்-என நீள இசையின்றி நீ நினைத்தால்-அம்மை நேர்படுவாள் உன்றன் தோளினிலே என்று ஒரு பாடலைப் பாடி அனைவரையும் மகிழ்வித்த தாகக் கூறினார் தம் பேச்சில். இப் பாடல், பாரதியாரின் "தாருக வனத்தினிலே’ என்று தொடங்கும் கோமதியின் மகிமை' என்ற பாடலின் சாயலை ஒத்துள்ளதைக் கண்டு மகிழலாம். இந்தப் பாடல்தான் பாடிய இளங்கவிஞரைப் 'பாரதிதாசன்' என்று தமிழ் உலகிற்கு உணர்த்தியதைக் கவிஞர் வாக்காலேயே உணர முடிகின்றது. இப்பாடல்முதற்பாடல்-பாரதியாராலேயே, "பூனிசுப்பிரமணிய பாரதியின் கவிதா மண்டலத்தைச் சேர்ந்த கனக. சுப்புரத்தினம் எழுதியது என்று எழுதப்பெற்று சுதேச மித்திரன்’ இதழில் வெளி வந்ததாம். பள்ளியில் பேசின. பேச்சில் சாதிபேதம், சமயபேதம் இல்லாதவர் என்பதையும், உயர்ந்த எண்ணமும் விரிந்த அறிவும் உடையவர் என்பதையும், கொள்கைக்காகப் போராடும் குணமும் கொண்டவர் என்பதையும் தெளி வாக உணர்த்திற்று. தந்தை பெரியார் கொள்கைகளை முற்றிலும் போற்றுகின்ற கவிஞர் என்பதும் தெளிவாகியது.