பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் பாரதிதாசன் 1 Ꮽ I ஆனால் பாரதியார் பல தேச பக்தர்களைப் பாடியதைப் போல் வெண்தாடி வேந்தரை'ப் பாரதிதாசன் பாட வில்லை; வேறு எவரையும் பாடியதாகவும் தெரியவில்லை. அக்காலத்தில் பாரதியார் பாடல்களையும் பாரதி தாசன் பாடல்களையும் புலவர் பெருமக்கள் அதிகமாக மதிப்பதில்லை. இவை பெரும்பாலும் கோடி வேட்டி’ நடையில்-புளியங்கஞ்சி போடப் பெற்று 20-ம் நம்பர் நூலில் நெய்யப் பெற்ற துண்டுபோல்-அமையாததே காரணம் என்று கருதத் தோன்றுகின்றது. இதனை விளக்கும் போக்கில் புதுச்சேரியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியைக் கவிஞர் விளக்கியதில் புலவர்களின் போக்கை அறிந்து கொள்ள முடிந்தது. யாரோ ஒரு புலவர்-கவிஞர் கூட்டத்தில் பெயரைச் சொன்னாலும் நான் சொல்ல விரும்பவில்லை - அப்புக் குட்டிப் புலவர் என்று கொள்வோம்-புதுச்சேரியில் ஒரு பெரிய கூட்டத்தில் பேசினாராம். அந்தக் கூட்டத்திற்குப் பாரதிதாசனும் போயிருந்தாராம். கூட்டத்தில் பேசிய புலவர் இக்காலக் கவிதைகளை வெறுக்கும் போக்கில், வெள்ளக்காரப் பணம் சின்னப் பணம் வேடிக்கை பாக்குதாம் வெள்ளிப் பணம் என்பது போன்ற வெள்ளைப் பாடல்களைப் பாடுவார்களே யன்றி ஆழ்ந்த கருத்தும் சொல்வளமும் உள்ள பாடல் களைப் பாடுவதில்லை, பாடவும் தெரியாது என்று கூறி கூட்டத்தினரிடையே கையொலியும்.பெற்றாராம். இதைக் கேட்ட கவிஞர் பேசுகின்றார்: எனக்கு இதைக் கேட்டுத் தாங்க முடியாத கோபம் வந்தது. ஒர் ஐந்து மணித் துளிகள் நான் பேச விரும்பிக் கூட்டத் தலைவருக்கு ஒரு சீட்டு அனுப்பினேன். நான் பேசினால் கூட்டத்தில் குழப்பம் ஏற்படும் என்று கருதி தலைவர் அனுமதி வழங்க மறுத்தார். எங்கள் பாரதிதாசன் பேசு