பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் பாரதிதாசன் 亚姆、 மேலும் தொடர்கின்றார் கவிஞர்: 1 அன்பர்களே, நான் புதுச்சேரியில் ஈசுவரன் கோயில் தெருவில் ஒர் இல்லத்தில் குடியிருக்கின்றேன். ஒரு நாள் பத்துவயது சிறுவன் ஒருவன் பட்டம் விட்டுக் கொண்டிருந்தான். பட்டம் சரியாகப் பறக்காமல் தவித்தது. பட்டத்தின் "வால் நீளம் போதாமையால்தான் அது சரியாகப் பறக்கவில்லை என்பதை உணர்ந்து கொண்டான் சிறுவன். பழைய துணிவேண்டும்; அதற்கு வீடு போய்வரவேண்டும். பையன் அதை விரும்பவில்லை. ஏழைப் பையன்; கோவணம்தான் அவன் உடுத்தி'யிருந்தான். ஒடு யோசனை தோன்றியது. கோவணத்தை அவிழ்த்தான். அதனைச் சிறு சிறு நீளத்துண்டுகளாக்கினான்; அவற்றைத் தேவையான அளவுக்குப் பட்டத்தின் வாலில் பொருத் தினான். இப்போது பட்டம் நன்கு பறந்தது; மன நிறைவு பெற்றான். ஆனால் அது பறந்து கொண்டே போய் ஈசுவரன் கோயில் விமானத்தின் (கருவறைக்கு மேல் உள்ள கோபுரம் போன்ற பகுதி தங்கக் கலசத்தில் அதன் வால் சுற்றிக் கொண்டது. இதனால் பட்டத்தை மீட்க முடியாததுபற்றி வருத்தம் ஒரு பக்கம் இருந்தாலும் என் கோவனத்தின் பெருமையே பெருமை; அது ஈசுவரன் கோயில் தங்கக் கலசத்தில் சுற்றிக் கொண்டதே: என்று மகிழ்ச்சிக் கடலில் மிதந்தான். இதனை மனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். நான் குறிப்பிட்ட அப்புக்குட்டிப் புலவருக்கு கவிதை இயற்றும் திறன் இல்லை. பெரிய புராணம் கந்தபுராணம் திருத்தணிகை புராணம் போன்ற நூல்களை ஆங்காங்கு சில அடிக்குறிப்புகளுடன் வெளி யிடுவார். முகப்புப்பக்கத்தில் சேக்கிழார் பெருமான் இயற்றிய திருத்தொண்டர் புராணம் எனப்படுகின்ற பெரியபுராணம் அடிக்குறிப்பு அப்புக்குட்டிப் புலவர்” என்று போட்டுக்கொள்வார். தம்முடைய பெயரும் சேக்கிழார் பெயருடன் சேர்ந்தேவருகின்றது என்று ம நி-13