பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 9.4 மலரும் நினைவுகள் மகிழ்ச்சிகொள்வார். இது எப்படியிருக்கின்றது என்றால் பட்டம் விட்ட சிறுவன் தன்னுடைய கோவணமும் ஈசுவரன் கோயில் தங்கக் கலசத்துடன் இணைந்து கொண்டதே என்று மகிழ்ந்ததைப் போன்றது இப் புலவரின் மகிழ்ச்சி' என்று கிண்டல் செய்தார். கூட்டத் தினரின் கையொலி அடங்க ஒரு மணித்துளி நேரம் ஆயிற்று. இந்த நிகழ்ச்சி இன்றும் என் மனத்தில் பகமையாகவே உள்ளது. D 口 I நான் வித்துவான் பட்டம் பெற்ற பிறகு பாரதியார், பாரதிதாசன், கவிமணிதேசிக விநாயகம் பிள்ளை இவர் கள் படைத்த கவிதைகளில் பேரார்வம் கொண்டு படித்து அநுபவித்துக் கொண்டு வந்தேன்; இவற்றில் என் மனத் தைப் பறிகொடுத்தேன் என்று கூடச் சொல்லலாம். கம்பனிலும் சிந்தாமணியிலும் பெரிய புராணத்திலும் நான் ஈடுபட்டுப் படித்தபோது பெற்ற கவிதையநுபவத் தையே இம்மூவர் இயற்றிய கவிதைகளைப் படித்த போதும் பெற்றேன். ஏன்? இன்னும் அதிகமாகவும் பெற் றேன் என்று கூடச் சொல்லலாம். ஒரு கவிஞரின் மனத்தில் சுயம்புவாக உருவான கவிதையின் பண்புகள் காலத்தால் மாறுபாடு அடைவ தில்லை. கவிதையின் உறுப்புகளும், அவற்றின் இலட்சியங் களும், பாடப்பெறும் பொருள்களும் காலத்திற்கேற்ற வாறும், கவிஞர்களின் படைப்பாற்றலுக் கேற்றவாறும் மக்களின் கலைச் சுவைக்கு ஏற்றவாறும் மாறுகின்றன. இவை கவிதைக்குக் கால , தேச, வர்த்தமானங்களை யொட்டியே அமைகின்றன. நிரந்தரமான உறுப்பில் கவிதை இசையுடன் ஒளிரும் கற்பனையின் வாசகம்; இந்த அகிலத்தின் எல்லையற்ற எழிலும், கவிஞர்களின் உள்ளம் ஆழங்கால் பட்டு அநுபவிக்கும்போது ஏற்படும் ஆவியின் மலர்ச்சி. இந்தப் பண்புகளைப் பண்டைக் காலத்தில்