பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் பாரதிதாசன் 1 95 தோன்றிய பெருங்கவிஞர்களின் படைப்புகளில் கண்டு மகிழலாம். ஆனால், புதிய கற்பனை முறைகளையும், சந்தங்களையும், காலத்திற்கேற்ற கருத்து இலட்சியங் களையும் மேற்கொள்ளும் ஆற்றல் கவிஞர்கட்கு இன்றி யமையாதது. தன் காலத்து ஆற்றல்களால் ஒரு கவிதை படைக்கப்பட்டபோதிலும், கவிஞன் தன் காலத்திற்கு அப்பாற்பட்ட இலட்சியங்களையும் எடுத்துக் காட்ட வல்லவன். இந்த இரண்டு நோக்கங்களையும் வைத்துக் கொண்டு பார்த்தால் பாரதி, பாரதிதாசன், கவிமணி இவர்களை மாபெரும் கவிஞர்கள் என்றே சொல்ல வேண்டும். ஈண்டுப் பாரதிதாசனை மட்டிலும் நோக்குவோம். அந்தக் காலத்தில் பாரதிதாசனின் இரண்டு மூன்று நூல்கள் தாம் வெளி வந்திருந்தன. பாரதிதாசன் கவிதைகள், அழகின் சிரிப்பு, குடும்ப விளக்கு (மூன்று பகுதிகள்) என்ப தாக நினைவு. பேரறிஞர் அண்ணா அவர்கள் இவற்றி லுள்ள பல பாடல்களையும் புரட்சிகரமான புதுவகை உவமைகளையும் தமது பேச்சில் எடுத்துக் காட்டித் தமது பேச்சை சுவையுடையதாகவும் இலக்கிய நயமுடைய தாகவும் செய்து கொண்டார். இதனால் அறிஞர் அண்ணாவின் புகழோங்கியது. பாவேந்தரின் புகழும் பட்டி தொட்டிகளிலெல்லாம் பரவக் காரணமாக அமைந்தது. அவரும் பாரதியாரைப்போல் பொது மக்களின் கவிஞராகி விட்டார். நான் பாவேந்தரின் பாடல்களைப் படிக்கும்போது அவற்றில் என் உள்ளத்தைப் பறிகொடுத்தேன். சஞ்சீவி பர்வதத்தின் சாரல்’ என்ற ஒரு பாடலைக் காவிய பாவனையில் தம் கொள்கைகளை விளக்கும்போக்கு என் மனத்தை மிகவும் கவர்ந்தது. இது வேகத்துடனும் ஆவேசத்துடனும் எழுதப்பெற்றுள்ள ஒரு கற்பனை ஓவியம். கவிஞரின் கவித்துவத்திற்கும் ஆவேசத்திற்கும்