பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 மலரும் நினைவுகள் பொங்கி எழும் உணர்ச்சிப் பெருக்கிற்கும் இப்பாடல் நல்ல தோர் எடுத்துக்காட்டு. இந்தக் கற்பனை ஆற்றலுடன் எழுதப் பெற்றிருப்பினும் செம்மையான கட்டு தளர்ந்து போயிற்று; ஓசை வளமும் குன்றிவிட்டது; நடையழகும் தேய்ந்து விட்டது. கவிஞரின் வேகமும் ஆவேசமும் இவற்றை விழுங்கிவிட்டன. கவிதையில் இலக்கியச் சுவை யுள்ள சொற்கள், சாதாரண சொற்கள், கொச்சை மொழிகள் இவை யாவும் பல்வேறு போக்கில் கலந்து ஓர் ஆற்றலைப் பெறுகின்றன. தம் நூதனக் கருத்துகளையும் இலட்சியங்களையும் பிரசாரம் செய்ய வேண்டும் என்ற ஆவேச வெறியிலிருப்பதால் அவை படிப்டோர் மனத்தில் ஆணித்தரமாய்ப் பதிவதற்கேற்பப் பாங்குடன் அமைத் துள்ளன. கவிஞரின் தெளிவான மனப்போக்கு சில இடங் களில் வசன நடை க்குக் கொண்டு செலுத்தினாலும் மொத்தத்தில் கவிதை சிரஞ்சீவித் தன்மையைப் பெற்று குப்பன் இரண்டு மூலிகைகளைக் கொணர்கின்றான். குப்பனும் அவன் காதலி வள்ளியும் ஒரு மூலிகையை தின்கின்றனர்: இது மற்றவர்கள் பேசும் பேச்சை அவர்கள் எந்த மொழியில் பேசினாலும் தமிழிலேயே கேட்கும் ஆற்றலைத் தருகின்றது. தம்நாடு அடிமைப் பட்டிருந்த போது ஆங்கிலேயன் ஒருவன் இந்தியர்களின் நிலைமையைப் பற்றிப் பேசியதை இருவரும் செத் தமிழில் செவிமடுக்கின்றனர். அவன் பேசுவது: ஒஒ என் சகோதரரே ஒன்றுக்கும் அஞ்சாதீர்! நாவலந் தீவு நம்மைவிட்டுப் போகாது. வாழ்கின்றார் முப்பத்து முக்கோடி மக்கள் என்றால் சூழ்கின்ற பேதமும் அந்தத் தொகையிருக்கும்; ஆகையால் எல்லாரும் அங்கே தனித்தனிதான். 1. இப்போது (1989) இத்தொகை 70 கோடிக்கு. மேல் தாண்டிப் போய் விட்டது.