பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் பாரதிதாசன் 19 7 ஏக மனதாகி அவர் நம்மை எதிர்ப்பதெங்கே? பேதம் வளர்க்கப் பெரும்பு ராணங்கள்! சாதிசண் டைவளர்க்கத் தக்க இதி காசங்கள்! கட்டிச் சமூகத்தின் கண்ணவித்துத் தாமுண்ணக் கொட்டி அளக்கும் குருக்கள் கணக்கற்றார். தேன்சுரக்கப் பேசிஇந்து தேசத்தைத் தின்னுதற்கு வான்சுரக்க விட்டுவந்த பூசுரரும் வாழ்கின்றார். இந்த உளைச்சேற்றை ஏறாத ஆழத்தை எந்த விதம்நீங்கி நம்மைஎதிர்ப்பார்? இன்னமும் சிந்தனா சக்தி சிறிதுமின்றி மக்களுக்குத் தம்தோள் உழைப்பிலே நம்பிக்கை தானு மின்றி ஊறும் பகுத்தறிவை இல் லா தொழித்துவிட்டுச் சாரற்ற சக்கையாய்ச் சத்துடம்பைக் குன்றவைத்துப் பொற்புள்ள மாந்தர்களைக் கல்லாக்கி யே அந்தக் கற்கள் கடவுள்களாய்க் காணப் படும்அங்கே இந்த நிலையிற் சுதந்திரப் போரெங்கே? கொந்தளிப்பில் நல்லதொரு கொள்கை முளைப்பதெங்கே? கம் அழிந்துவிடும்; சுற்றத்தார் செத்திடுவார்: போகங்கள் வேண்டா, பொருள் வேண்டா மற்றுமிந்தப் பாழுலகம் பொய்யே! பரமபதம்போ' என்னும் தாழ்வகற்ற எண்ணுங்கால் சாக்குருவி வேதாந்தம். சாதிப் பிரிவு சமயப் பிரிவுகளும், நீதிப் பிழைகள் நியமப் பிழைகளும், மூடப் பழக்கங்கள் எல்லாம் முயற்சிசெய்தே ஒடச் செய்தால் நம்மையும் ஒடச்செய்வார் என்பேன். 4 : o

  • بینہ۔

(نہ‘‘ என்பது. அடுத்த மூலிகையைத் தின்றதும் பூவுலகில் இராமாயணக் காலட்சேபம் நடத்து கொண்டிருப்பதை இருவரும் நேரில் காண்கின்றனர். இப்படிக் கவிஞரின் கற்பனை சுவை குன்றாமல் போகின்றது இந்தப் பாடலில்.