பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் பாரதிதாசன் 199 தேனில் தொட்ட பலாச்சுளைகள். இப்பாடல்களைத்தான் அறிஞர் அண்ணா தம் சொற்பொழிவுகளில் அடிக்கடி எடுத்தாளுவதைக் கேட்டுள்ளேன். இந்த நூலிலுள்ள சில பாடல்கள் இன்னும் என் மனத்தில் ஒலித்துக் கொண் டுள்ளன. சிலவற்றைக் காட்டுவேன். காலையிளம் பரிதியிலே அவளைக் கண்டேன்; கடற்பரப்பில், ஒலிப்புனவில் கண்டேன்; அந்தச் சோலையிலே, மலர்களிலே, தளிர்கள் தம்மில் தொட்டஇடம் எலாம் கண்ணில் தட்டுப் பட்டாள் ! மாலையிலே மேற்றிசையில் இலகு கின்ற மாணிக்கச் சுடரிலவள் இருந்தாள் ஆலஞ் சாலையிலே கிளைதோறும் கிளியின் கூட்டந் தனில் அந்த அழகெ’ என்பாள் கவிதை தந்தாள் சிறுகுழந்தை விழியினிலே ஒளியாய் நின்றாள் திருவிாேக்கில் சிரிக்கின்றாள். நாரெ டுத்து நறுமலரைத் தொடுப்பாளின் விரல்வ ளைவின் நாடகத்தைச் செய்கின்றாள்; அடடே செந்தோள் புறத்தினிலே கலப்பையுடன் உழவன் செல்லும் புதுநடையில் பூரித்தாள்; விளைந்த நன்செய் நிறத்தினில் என்விழியை நிறுத்தி னாள்:என். நெஞ்சத்தில் குடியேறி மகிழ்ச்சி செய்தாள்.' இவை இரண்டும் அழகுபற்றிய கவிதைகள். இந்தத் தொகுப்பிலுள்ள எல்லாக்கவிதைகளும் இயற்கை அன்னை யின் எழிலைக் காட்டி நிற்பவை. பாடியவாய் தேனுாறும் பான்மையவை. அக்காலத்தில் குடும்ப விளக்கு’ என்ற நூலின் ஐந்து பகுதிகளும் வெளிவரவில்லை. மூன்று பகுதிகளே வெளி வந்ததாக நினைவு. ஐந்து பகுதிகளையும் படித்து உணர் வோர் நல்ல குடும்பம் ஒரு பல்கலைக் கழகம்’ என்ற 1. அழகின் சிரிப்பு-அழகு 1, 2