பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 to மலரும் நினைவுகள் உண்மையைத் தெளியலாம். அந்தக் காலத்தில்-துறையூர் வாழ்வின்போது சாதாரண மக்களும் அறிந்து கொள்ளும் பாங்கில் பத்துக் கட்டுரைகளை திரு. பெ. தூரனை ஆசிரியராகக் கொண்டு கோவையிலிருந்து வெளிவந்த 'காலச் சக்கரம்’ என்ற திங்கள் இதழில் வெளியிட்டேன். அவற்றில் ஒன்று, கட்டுக்குள் அடங்கா தாடிக் களித்திடும் தனது செல்வச் சிட்டுக்கள் சுவடிக் குள்ளே செந்தமிழ் தீனி உண்ண விட்டுப்பின் அடுக்க ளைக்குள் அமுதத்தை விளைவு செய்தாள் என்ற குடும்ப விளக்கின் ஒரு பகுதியை விளக்குவதாக அமைந்தது. கட்டுரை அச்சில் நாலு பக்கமாக நீண்டது. சர்பத் கலக்குவதைப்போல் எளிமையாக்கினால் தான் பொது மக்களுக்குச் செரிமானம் ஆகும் என்பது எழுத் தாளர்கள் கண்ட உண்மை. கோழிக் குஞ்சுகள் தானிய மணிகளை ஒவ்வொன்றாகக் கொத்தி உண்ணும். அரை வகுப்பில் (முதல் வகுப்புக்குக் கீழ் வகுப்பு) படிக்கும் சிறுவர்களும் சுவடிகளில் எழுத்தை ஒவ்வொன்றாகத் தான் ஒலித்துப் படிப்பர். இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் கவிஞர் உள்ளத்தில் ஒன்று சேர்ந்து ஒரு கவிதையாக உருவெடுக்கின்றன. சிட்டுகளுக்குத் தீனியிட்ட சேடியின் செயலும் பிள்ளைகட்குச் செந்தமிழ்த் தீனியிட்ட தலைவி யின் செயலும் ஒன்று சேர்ந்து பாலொடு தேன் கலந்தது போல் சுவை மிகுந்து ஒர் அழகான சொல்லோவியமாக வெளிப்பட்டிருப்பதைக் கட்டுரையில் விளக்கியிருந் தேன். கவிஞர் துறையூரில் என் இல்லத்தில் தங்கியிருந்த போது இக்கட்டுரையை அவரிடம் காட்டினேன். படித்து அதிசயித்துப் போனார். அந்த அதிசயத்தால் என்னை க்