பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் பாரதிதாசன் 20 I கட்டி அனைத்துக் கொண்டார். அவர் என்னை நெருங்கிய போது என் எலும்புகள் நொருங்கி விடுமோ என்று கூட அஞ்சினேன்! உடும்புப் பிடி. சிறந்த பயில் வான் அல்லவா? நான் இக்கவிதையைப் படைக்கும்போது கூட இக் காட்சிகள் என் மனத்தில் தோன்றவில்லை. உங்கள் கட்டுரையால் என் கவிதையின் மாற்று தெரிகின்றது. கோலார் தங்க வயலில் எடுக்கப் பெற்றுத் துரய்மையாக்கப் பெற்ற தங்கத்தின் மாற்று கட்டளைக் கல்வில் உரைக்கப் படும் போதுதானே தெரிகின்றது!' என்று சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார். துறையூரில் இருந்தபோது காலையில் காஃபி அருந்திய பின் ஒர் அரைமணி நேரம் உலாவச் செல்வோம், அப்போது மூடப் பழக்கங்களை ஒழிக்கும் பல திட்டங் களைக் கூறுவார். அவை அனைத்தும் பயங்கரமானத் திட்டங்கள். அவை யாவும் சமூக விரோதமான செயல்கள். ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை அவமானப்படுத் தும் செயல்கள். அவை செயற்பட்டால் திட்டத்தில் ஈடுபடு வோர் அனைவருக்கும் சிறைவாசம்தான் கிடைக்கும் என்று கவிஞருக்கு எடுத்துச் சொன்னேன். ரெட்டியார், எனக்கு மட்டிலும் இது தெரியாதா? பொதுமக்களிடம் திதி திரட்டி அந்த நிதியைக் கொண்டு சிறைத் தண்டனை அநுபவிப்போர் குடும்பத்தினரைக் காக்க வகை செய்ய வேண்டும். மூலத்தைக் களையும்போது பல்வேறு இக் கட்டுகளைச் சந்திக்க நேரிடும். அவற்றைச் சமாளிக்கத் தான் வேண்டும்' என்று சொல்லுவார். துறையூரிலிருந்த காலத்தில் ஐந்து நாட்களில் மாலை யில் நான்கு இடங்களில் நான்கு கூட்டங்கட்கு ஏற்பாடு செய்து கூட்டத்திற்குப் பதினைந்து ரூபாய் வீதம் சன்மானமாக வாங்கித் தந்ததாக நினைவு. அக்காலத்தில் ரூ60| = ஒரு கணிசமான தொகையே. ஐந்து நாட்கள் ஐந்து மணி போல் உருண்டோடின. என் அருமை நண்பர் மணவாளன் ஒட்டிச் செல்லும் பேருந்தில் ஏற்றித்