பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

392 மலரும் நினைவுகள் திருச்சிக்கு அனுப்பி வைத்தேன். இதற்கெல்லாம் என் தோழ ஆசிரியர் திரு. P. மாத்ருபூதம் தான் உதவி செய் தார். இதன் பிறகு சுமார் இருபதாண்டுக் காலம் கவிஞரைச் சந்திக்கவில்லை. காரைக்குடியில் பணியாற்றியபோது (1950-60) கவிஞரின் பல நூல்கள் வெளி வந்து விட்டன. அவற்றையெல்லாம் நன்கு படித்துச் சுவைத்தேன். என் அருமை நண்பர் திரு. நாராயணன் செட்டியார் (கலை மகள் அச்சக உரிமையாளர்) நடத்தி வந்த வாரச் செய்தி' என்ற வார இதழில் தொடர்ந்து என் கருத்துகளை கட்டுரைகளாக வெளியிட்டேன். சுமார் இரண்டாண்டுக் காலம் கட்டுரைகள் வெளி வந்து கொண்டிருந்தன. அவற்றைச் சேமித்து வைத்திருந்தேன். இடமாற்றத்தால் அவை எப்படியோ காணாமற் போயின. இப்போது கவிஞரின் நூல்களைத் திறனாய்ந்து நூலொன்று வெளி யிட நினைக்கின்றேன். இறையருளால் என் எண்ணம் நிறைவேறும் என்று கருதுகின்றேன். திருப்பதியில் பணியாற்றிய போது (1960-77), 1965 இல் திருமால் திருநெறி மன்றம் அழைப்பை ஏற்று புதுச்சேரிக்குச் சொற்பொழிவாற்றச் சென்றிருந்தேன். இதற்குப் பூதுர்ர் சுவாமிகள்தான் புருஷகாரமாக அமைந்: தார். தமிழறிஞர் திரு. R. தேசிகம் பிள்ளை அவர்களின் விருந்தினனாக அவர் வீட்டில் அனைவரும் தங்கியிருந் தோம். அப்போது கவிஞரைப் பார்க்கச் சென்றேன். ஈசுவரன் கோயில் தெருவிலிருந்து அவர் இல்லம் இப்போது பெருமாள் கோயிலுக்கு மாற்றப் பெற்றிருந்தது. அங்குச் சென்று ஒரு மணி நேரம் கவிஞருடன் அளவளாவிக் கொண்டிருந்தேன். அதன் பிறகு கவிஞரைச் சந்திக்க வில்லை, கவிஞரும் திருநாடு அலங்கரித்து விட்டார். ஒய்வு பெற்ற பிறகு சென்னையில் வாழ்கின்றேன். சென்ற ஆண்டு (பிப்பிரவரி, மார்ச்சு, ஏப்பிரல் திங்களில்)