பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. கவிராசபண்டிதர் செகவீர பாண்டியனார் உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில் (குறள் -394) 1945-என நினைக்கின்றேன்; என் அருமைநண்பர் திரு. K.S. முத்துவேல் பிள்ளை (சிலோன் லேபர் கமிஷன் ஏஜண்ட் அவர்கள்மூலம் செகவீரபாண்டியனார் துறை ஆருக்குச் சுமார் ஒன்பது கல் தொலைவிலுள்ள புலிவலம் என்ற ஊருக்கு வந்து ஒரு திருமணத்தில் கலந்து கொள்ளு கின்றார் என்று கேள்வியுற்றேன். புவிவலத்திலுள்ள திரு. சுப்பிரமணியம் செட்டியார் என்பவர் துறையூரில் ஒரு பேரிய துணிக்கடை வைத்திருந்தார். கடை புகழ் பெற்ற கடை. இதனால் செட்டியார் எல்லோருக்கும் நன்கு அறிமுகமானவர். அவர் தம் மகள் திருமணத்தைப் புலிவலத்தில் நடத்தினார். எனக்கும் அழைப்பு வந்தி ருந்தது. இந்தத் திருமணத்தில் செகவீர பாண்டியனார் இரண்டு சொற்பொழிவுகள் நிகழ்த்துவதற்கு ஏற்பாடு செய்யப் பெற்றிருந்தது. திருமணத்தன்று பிற்பகல் 2-39க்கு 'சீதைத் திருமணம்' என்ற தலைப்பில் பேசுகின் றார் என்று அறிவிக்கப்பெற்றிருந்தது. திரு.முத்துவேல் பிள்ளையும் நானும் திருமணத்தில் கலந்து கொண்டோம். இவ்வளவு தொலைவு வந்திருந்த திரு.செகவீர பாண்டியனாரை என் பள்ளிக்கு எப்படி