பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிராசபண்டிதர் செகவீர பாண்டியனார் 295 யாவது அழைத்து வந்து பள்ளி மாணவர் இலக்கியக் கழகத்தில் பேச வைக்க வேண்டும் என்பது என் ஆசை . இந்த ஆசையுடன் தான் நான் புலிவலம் சென்றிருந்தேன். திரு.முத்துவேல் பிள்ளையும் நானும் இதற்காக ஒரு காரில் சென்றிருந்தோம். காலையிலேயே திரு.செ.கவிர பாண்டியனாரிடம் பேசி அன்று மாலை புலிவலத்தில் சொற்பொழிவு முடிந்தவுடன் துறையூர் நிகழ்ச்சியை நிறைவேற உறுதி செய்தோம், நானும் என் பள்ளி ஆசிரியர்களுடன் கலந்து பேசி சுமார் மாலை நான்கு மணிக்கு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தேன். பிற்பகல் சுமார் 2-மணிக்கு கூட்டம் தொடங்கியது. சுமாரான கூட்டம். 100 பேர் வரை கூடியிருந்தனர். திருமணத்திற்கு வந்திருந்த பெரும்பாலோர் இலக்கியத் தைச் சுவைக்கத் தெரியாதவர்கள். திரு. செட்டியார் இலக்கிய சுவைஞர்தான். அதனால்தான் புலவரைத் திரு K.S. முத்துவேல் பிள்ளையவர்கள்மூலம் இந்த ஏற்பாடு செய்திருந்தார். திரு. பாண்டியனார் சீதை திருமணம் என்ற தலைப்பில் பேசிய பேச்சு அற்புதமாக அமைந்திருந்தது. ஆனால் கூட்டம் இரசிகர் கூட்டமாக இல்லை. பேச்சு நடைபெற்றுக் கொண்டு இருக்கும் பொழுதே 2-45க்கு சிற்றுண்டிக்கு இலை போட்டாய் விட்டது” என்ற அறிவிப்பு செய்யப்பட்டது. ஒரு பத்து பேரைத் தவிர அனைவரும் சிற்றுண்டிக்காக எழுந்து சென்று விட்டனர். திரு பாண்டியனாருக்கு உற்சாகம் தளர்ந்து விட்டது. ஒரு பதினைந்து மணித்துளிகளில் தம் சொற்பொழிவை முடித்துக் கொண்டு உட்கார்ந்து விட்டார் திரு. பாண்டியனார். சிற்றுண்டி முடிந்ததும் அனைவரும் வந்து மீண்டும் கூடினர். திரு. சுப்பிரமணியம் செட்டியார் மீண்டும் சொற்பொழிவைத் தொடங்குமாறு திரு. பாண்டிய னாரைக் கேட்டார். திரு பாண்டியனர் சொன்னார்: