பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

慧翡移 மலரும் நினைவுகள் ..இன்றைய பேச்சு இவ்வளவு தான். ஒரு முறை தான் இதைத் திருமணம். இனி நாளைக்குத்தான் பேச்சு. 4-மணிக்குத் துறையூரில் பேசவேண்டும்.’’ என்று கண்டிப் பாகச் சொல்லிவிட்டார். திருப்பூட்டு முடிந்து திருமணத் திற்குத் தாமதமாக வந்தவர்கட்காக மீண்டும் ஒரு முறை இருப்பூட்டு நிகழ்ச்சியை மேற்கொள்ள முடியுமா?" என்றே கேட்டுவிட்டார் நேராகச் செட்டியாரையே. பாவம், திரு.சுப்பிரமணியம் செட்டியார். தம் திருமணத் திற்கு வந்திருந்தோரைப் பேச்சைச் சுவைக்க வைக்க முடிய வில்லை. கோவில் மேளம்போல் இதனை ஏற்பாடு செய்து விட்டார். மேளக்காளர் தட்டு’ என்றால் தட்டுவார்கள்: தத்து என்றால் நிறுத்தி விடுவார்கள். திரு. பாண்டிய மேளக்காரரைப்போல் நினைத்துக் கொண்டது ன் துரதிர்ஷ்டமானது. அவருக்குத் தெரிந்தது அளவுதான்! அக்காலத்தில் செகவீரபாண்டியனாரின் திருக்குறள் குமரேச வெண்பா' வெளிவந்திருந்தது. சிறந்த நூல், புத்தக சந்தையில் அதிக விற்பனை இல்லை. பள்ளிக் கூடங்களுக்கும் பொது நூலகங்களுக்கும் மிக்கப் பரிந்துரை யுடன் வலிந்து கட்டவேண்டியிருந்தது அம்மாமி சுண்டல் விற்பது போல். இது தவிர "புலவர் உலகம்' என்ற திங்கள் இதழ் ஒன்றையும் வெளியிட்டு வந்தார். அது பெரும் பாலும் கம்பராமாயணத்தின் விரிவுரையாகவே அமைந் திருத்தது. திருக்குறள் குமரேச வெண்பா ஒரு செட்டு பள்ளிக்காக வாங்கிக் கொண்டேன். மூன்று வருடத்திற்கு புலவர் உலகத்திற்குச் சந்தாவும் செலுத்தினேன். இதனால் தான் துறையூருக்கு வர ஒப்புக் கொண்டார் பாண்டிய னார். இந்த இரகசியத்தை நன்கு தெரிந்து வைத்திருந் தார் திரு K.S.முத்துவேல் பிள்ளை. அரைமணி நேரத்தில் திரு முத்துவேல் பிள்ளையின் கார் எங்களைத் துறையூர் பள்ளியில் கொண்டு வந்து சேர்த்தது. மாணவர்களும்