பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

za8 மலரும் நினைவுகள் சேர்த்து வைத்திருந்தான். இக்காலத்துக் காங்கேயன் காளைகள்போல் அவை மிகவும் அழகாக இருந்தன. இரண்டையும் அப்போதுதான் எங்கோ இரண்டிடங்களில் வாங்கிச் சோடி சேர்த்திருந்தான். காளைகள் நின்ற காட்சி தேவரின் மனத்தைக் கவர்ந்தது. அவை நின்ற கம்பீரமான நிலை பாவலரின் மனத்தில் நிலைபெற்றது. அவற்றின் உருவப்பொலிவும், ஒரே விதமான கொம்புகளின் அழகும், அவரது மனத்தைக் கொள்ளை கொண்டன என்று சொல்லலாம். ஒன்றை பொன்று முகர்ந்து கொண்டும். ஒன்றோட்ென்று சாய்ந்து கொண்டும், நக்கிக்கொண்டும். ஒன்றையொன்று அன்பு அசட்டிக்கொண்டுப் நின்ற காட்சிகள் எவர் மனத்தையும் கொள்ளை கொள்ளாமல் இருத்தல் முடியாது. இதனை இப்படியே மனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்' என்று க்ரீனார் பாண்டியனார். தொடர்ந்து அடுத்த நிகழ்ச்சியொன்றைச் சிந்திப் போம். பெண்ணை மணந்து கொண்டதனால் மாமன் ம ஆகர்களிடையே நிலவி வரும் அன்பு தனிப்பட்ட ஒன்று. புதிதாக மணந்த மாப்பிள்ளை, மாமனார் வீட்டார்மீது (மைத்துனன் மீது ஒரு தனியான அன்பை வைத்திருப்பது இன்றைய உலகில் நாம் கண்கூடாகக் காணும் நிகழ்ச்சி, மாப்பிள்ளை சிலசமயம் ஈன்று வளர்த்த தாயையும் இகழ்கின்றான்: கல்வி பயிற்றித் தன்னைச் சான்றோ னாக்கிய தந்தையையும் இகழ்கின்றான். இஃது இகழ வேண்டும் என்ற எண்ணத்தினாலன்று; toss 1033rtrif வீட்டார் மீது வைத்துள்ள மோகமே” இதற்குக் கi சணம் . திருத்தக்க தேவர் சிந்தாமணியைப் பாடுங்கால் காளைகளின் காட்சியும் மாமன் மருகரது தொடர்பும் அவரது நினைவிற்கு வந்தன. ஏமாங்கத நாட்டு வள்த்.