பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிராசபண்டிதர் செகவீர பாண்டியனார் 然倭象 தைப் பாடுங்கால் இக்கருத்துகள் அடங்கிய சொல் லோவியம் வெளிப்படுகின்றது.' மாமனும் மருகனும் போல அன்பின; காமனும் சாமனும் கலந்த காட்சிய: பூமனும் அரிசிப்புல் லார்ந்த மோட்டின: தாமினம் அமைந்துதம் தொழிலின் மிக்கவே." (சாமன்-காமன் தம்பி; மோடு-வயிறு) இனி கவிதையிலுள்ள உவமை அழகினை விளக்கத் தொடங்குகின்றார் திரு. செகவீர பாண்டியனார். எல்லா அன்பையும் விடத் தாயன்பு சிறந்ததாயிற்றே. அதனைக் கையாளாது விட்டது என்ன காரணம் என்று கேட்கலாம். சேர்ந்து நின்ற இரண்டும் ஆண்கள். தாய் பெண்பாலாதலால் அவ்வுண்மையைக் கொள்ளவில்லை.”* சரி: தாயன்புக்கு அடுத்த படியாக இருப்பது தந்தை யன்பு. அதையாவது எடுத்துக் கொள்ளலாமே என்றால், அங்குக் கட்டுப்பட்டிருந்த காளைகளில் ஒன்று மற்றொன்றி லிருந்து பிறக்கவில்லை; உழவன் இரண்டு காளைகளையும் வெவ்வேறு இடத்தில் வாங்கிச் சோடி சேர்த்திருந்தான். ஆகவே, அந்த உவமையையும் கொள்ளவில்லை. அதற்கடுத்த படியாக உடன் பிறப்பைக் கூறியிருக்க லாம்; அண்ணனும் தம்பியும்போல் அன்பு காட்டி நின்றன என்று சொல்லியிருக்கலாம். அப்படியும் சொல்லவில்லை. இரண்டும் பிறந்த இடம் வெவ்வேறாதலால்-ஒரே வயிற்றில் பிறக்கவில்லையாதலால்-அவ்வுவமையும் கை விடப் பெற்றது’ 'அதற்கும் அடுத்த படியாக ஆசிரியனும் மாணவ னும் போல’ என்ற உவமையை அமைத்திருக்கலாம். 1. சீவக சிந்தாமணி-நாமகள் இலம்பகம்-14 ம. நி-14