பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிராசபண்டிதர் செகவீர பாண்டியனார் 荔置皋 உற்ற சமயத்தில் செயத் தக்கதைச் செய்யாதிருப்பின் பிராட்டியாரின் நிலை என்ன ஆயிருக்கும் என்பதை நாம் அறிவோம். இராமனது பரக்கும் தொல் புகழும் அழிந்து பட்டிருக்கும். இங்ங்னம் அழியாது முதற்கோணலை நிமிர்த்தின. பெருமை அஞ்சனைச் சிறுவனைச் சாரும்’ என்று விளக்குவார் கவிராசபண்டிதர். இரண்டாவது : 'இந்திரசித்து தொடுத்து விடுத்த அரவக்கணையால் அ ல் ேல | ல க ல் ேவ ர ல ப் பட் டுப் போயிற்று வானரசேனை. இலக்குவனும் நாகபாசத்தால் கட்டுண்டு கிடக்கின்றான். வீடணன் புலம்புகின்றான்: இராமனும் சோர்வுற்றுப் பேசாத நிலையை அடை கின்றான். ஆயின் இந்த அவலநிலையெல்லாம் கருடன் வரவால் மாறிவிடுகின்றது. வானரசேனையினிடையே ஆரவாரம் கிளம்புகின்றது. படைத் தலைவர்களைப் போருக்கு அனுப்புகின்றான் இராவணன். அவர்களும் அழிந்து படுகின்றனர். அடுத்து இராவணன் அநுமதி பெற்றுக் கரன் புதல்வன் மகரக்கண்ணன் போர் அரங்கில் தோன்றுகின்றான். அவனும் இராமனது கணையால் மாய்ந்தொழிகின்றான். மீண்டும் இந்திரசித்து போர் அரங்கில் தோன்றுகின்றான். இம்முறையும் கடும்போர் நிகழ்கின்றது. இந்திரசித்து விண்ணில் மறைந்து மலரவன் படையை ஏவுகின்றான். அதன் விளைவால் இலக்குவன் அயர்ந்து போகின்றான். அநுமனும்சோர்ந்துவீழ்கின்றான். அருக்கன் மகன், வாலி காதலன், நீலன், இடபன் பணசன் குமுதன் முதலிய வானர வீரர்கள் உயிர் துறக்கின்றார். இங்ங்ணம் இறந்துபட்ட வீரர்களையெல்லாம் கண்ட இராமன் பெருந்துயருறுகின்றான் தம்பியின் நிலையைக் கண்டு உளம் துடித்து உயிர் பதைத்து ஒன்றும் பேசாது தன்னை மறந்து துயில்கின்றான். அரக்கர்கள் இலங்கை யில் வெற்றி விழா கொண்டாடுகின்றனர்; இந்நிலையில் விடணன் அநுமன்மீதுள்ள அம்புகளைக் களைந்து அவனுடைய அயர்ச்சியைப் போக்குகின்றான். அடுத்து,