பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

露置翡 மலரும் நினைவுகள் சாம்பவன் மூலம் உயிர் பிழைப்பிக்கும் சஞ்சீவி மருந்தினை அறிகின்றனர். சாம்பவானே மருந்திருக்கும் இடத்தைக் கூறி அதற்கு வழியையும் செப்புகின்றான். அநுமனும் பேருருவம் கொண்டு விரைந்து சென்று மருந்திருக்கும். மலையையே கொணர்ந்து விடுகின்றான். யாவரும் உயிர் பெற்றெழுகின்றனர். இராமனும் மாருதியை நோக்கி உள்ளம் உருகப் பேசுகின்றான். இங்ங்னம் இராமன் வாழ்வில் நேர்ந்த இரண்டாவது கோணலை நிமிர்த்தி, னான் கவிநாயகன். என்பார் செகவீர பாண்டியனார். மூன்றாவது : வீணைக் கொடியோனை வீழ்த்தி மிதிலைச் செல்வியை மீட்டிக் கொண்டு இராமன் அயோத்திக்கு மீண்டு வருங்கால் இடையே பரத்துவாசரது ஆச்சிரமத்தில் தங்க நேரிடுகின்றது. காடுறை வாழ்க்கை வின் தொடக்கத்தில் கொடுத்த வாக்கினையொட்டி முனிவனின் விருந்தினனாகத் தங்கி விடுகின்றான். எல்லோரும் விருந்துண்ணத் தொடங்குங்கால் விரைசெறி. கலக்கண்ணன் அதுமனை விளித்துச் சொல்லுகின்றான் . இன்று தாம்பதி வருதுமுன் மாருதி ஈண்டச் சென்று தீதன்மை செப்பிஅத் தீயவித்து இளையோன் நின்ற நீர்மையும் நினையும் நீ தேர்ந்து எம்மின்நேர்தல் தன்று' என்று இராகவன் கூறியதைக் கேட்டு அநுமனும் கணை யாழியைக் கைக்கொண்டு தந்தை வேகமும் தனது நாயகனது தனிச் சிலையினின்று புறப்படும் அம்பின் வேகமும் பின்னிடும்படி விரைவாகச் சென்று இராமன் வருகையை வழிமீது விழி வைத்துக் காத்திருந்த குகப் பெருமானுக்குச் சேயோன் வந்த வாசகத்தைக் கூறி 5. யுத்த-மீட்சி. 202