பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிராசபண்டிதர் செகவீர பாண்டியனார் 215. வான்வழிச் செல்லுகின்றான். பதினான்கு ஆண்டுகள் முடிந்தும் இராமன் வரவில்லையே என்று தீ மூட்டி அதில் விழுவதற்குத் தயாராக இருந்த பரதன்முன் குன்றுபோல் நெடு மாருதி சென்று, ஐயன் வந்தன ன் ஆரியன் வந்தனன் மெய்யின் மெய்யன்ன நின்றுயிர் வீட்டினால் உய்யி மேயவன் என்றுரைத் துட்புகாக் கையி னால் எரி யைக்கரி யாக்கினான்." (வீட்டினால்- ஒழிந்தால்) 'தலைவனான இராமன் வந்தான்; பெரியோன் வந்தான். உண்மை தவறாத உன் உயிர் ஒழிந்தால் இராமன் உயிர் வாழ்வானா?” என்று உரைத்துக்கூடியிருந்த கூட்டத்தினுட் புகுந்து நெருப்பைப்பிசைந்து அவித்துக்கரியாக்குகின்றான். இங்ங்னம் மாருதி உற்ற சமயத்தில் வந்து எரியை அவியா திருப்பின் பரதனின் நிலை யாதாயிருக்கும்! இறந்து போயிருப்பானன்றோ? இதனைக் கண்ணாலும் காணச் சகிக்காத இராமன் முதலிய அனைவரும் அத்துயர் தாங்காது பரதன் வழியையே பின்பற்றியிருப்பர். அவ்வித முடிவு ஏற்படுமாயின் இராமசரிதமும் வேறுவிதமாயிருக் கும். இராகவன் புகழும் இனித்திராது’ என்று கூறி முடித்தார் திரு. பாண்டியனார். தொடர்ந்து, 'இவ்வாறு புகழ் மணக்கும் இராம காதையின் இடையே புகுந்த மூன்று கோணல்களையும் நிமிர்த்திச் செப்பஞ் செய்த பெருமை அதுமனைச் சார்ந்துள்ளதனால், கவிக்கு நாயகனாகிய கம்பநாடன் கவி நாயகனாகிய அதுமனைச் செவிக்குத் தேனென இராகவன் புகழினைத் திருத்தும் கவிக்கு நாயகன்’ எனச் சுவையாகச் சுட்டியுரைத்தனன். கவிக்கு நாயகன்' கவிநாயகன்’ என்ற அருமையான இரண்டு சொற்றொடர் 6. யுத்த மீட்சி-249