பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 6 மலரும் நினைவுகள் களும் கம்பனையும் மாருதியையும் குறிப்பதை அறிந்து மகிழ்கின்றோம். இவை இரண்டும் படிப்போரின் சிந்தை யில் தேன்பிலிற்றும் சிறப்பான சொற்றொடர்களாக நின்று சிந்தைக்கும் செவிக்கும் இன்னமுது ஊட்டி நிற்பதை யும் நாம் உணர்கின்றோம்' என்று கூறி உரையைத் தலைக் கட்டினார் புலவர் பெருமான். நான் ஆர்வத்தனாகத் தமிழ் இலக்கியத்தில் ஈடு பட்டிருந்த காலத்தில் துறையூருக்கு வந்தார் பாண்டிய னார்.இவர் எனக்கு அடிக்கடிச்சந்திக்கக்கூடியதொலைவில் இருந்திருப்பாரேயானால் இவரிடம் எவ்வளவோ நன்மை யடைந்திருப்பேன். கூட்டம் முடிந்து திரும்பவும் மறுநாள் பேச்சுக்குப் புலிவலத்திற்கு அனுப்பியபோது உண்மையி லேயே உள்ளப் பிரித்தேன். அந்தக் காட்சி இன்றும் என் மனத்தில் பசுமையாகவே உள்ளது. இன்று கவிராசபண்டிதர் நம்மிடையே இல்லை. இவருடைய சொற் பொழிவுகள் அக்காலத்தில் ஒரு கல்விப் பணியாகவே இருந்து வந்தன. இவருடைய மிடுக்கான வாக்கு சில சமயம் கட்டபொம்மனின் வீர வாக்குகளை நினைவூட்டும் என்றும் வேறு சில சமயங்களில் இவர் சொற்பொழிவுகளை ఇహ్ర வெஞ்சமர் புரியாது ஊமைத்துரைபோல் பேசாத பேச்சாகத் தம் உணர்ச்சி களைப் புலப்படுத்துவதும் உண்டு என்றும் இவருடைய பேச்சுகளை அடிக்கடிக் கேட்டவர்கள் மூலம் கேள்வியுற்ற துண்டு, கட்டபொம்மனின் மரபில்வந்த பெண்மணியைத் தம் வாழ்க்கைத் துணைவியாக ஏற்றுக் கொண்ட வரல்லவா?