பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. டாக்டர் மு. வரதராசனார் அன்புநாண் ஒப்புரவு கண்னோட்டம் வாய்மையொ(டு) ஐந்துசால் (பு) ஊன்றிய தூண். (குறள்-983) 1948 என நினைக்கின்றேன். டாக்டர் மு. வரதராச னாரை அவர் இல்லத்தில் சந்தித்ததாக நினைவு. அப்போது சேத்துப்பட்டில் ஒரு வாடகை வீட்டில் குடியிருந் தார். ஏதோ ஒர் அலுவல் நிமித்தம் சென்னைக்கு வந்திருந்தபோது அவரை மரியாதைக்காகச் சந்தித்தேன். அப்போது நான் துறையூர் உயர்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியன். டாக்டர் மு.வ. பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியர். நானே பெருமுயற்சி கொண்டு நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக்கின வரலாற்றை எடுத்துக் கூறினேன். ஆண்டு விழாவிற்கு மிகப் பெரியவர்கள் தலைமையில் தமிழ்ப் பேரறிஞர்கள் கலந்து கொண்டு வருகின்றார்கள் என்றும், அவரையும்.இந்த ஆண்டு மார்ச்சுத் திங்கள் முதல் வாரத்தில் நடைபெறும் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு மாணவர்கட்குப் பொருத்தமாக ஏதோ ஒரு பொருள் பற்றிப் பேச வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டேன். அவரும் தாம் பொதுவாகப் பொதுக் கூட்டங்களுக்குப் போவதில்லை என்றும், ஆனால் பள்ளியாக இருப்பதாலும் நான் நேரில் வந்து கேட்பதாலும் ஒப்புக் கொள்வதாகக் கூறினார். தான் துறையூர் திரும்பியதும் ஆண்டு விழா நாள் உறுதி