பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

意翼岛 மலரும் நினைவுகள் யானதும் எழுதுவதாகக் கூறி விடை பெற்றுக் கொண்டேன். ஆண்டு விழா நாள் உறுதியாயிற்று. திருச்சியில் புகழ் பெற்ற வக்கீல் கைலை அனந்தர் (சோமசுந்தரம் பிள்ளை) தலைமை ஏற்க ஒப்புக் கொண்டார். டாக்டர் மு. வ. வும் அந்த நாளுக்கு ஒப்புக்கொண்டு தமது வருகையை உறுதிப் படுத்தினார், துத்துக்குடி விரைவு இருப்பூர்தியில் வருவ தாகவும் எழுதியிருந்தார். நானும் மேல் வகுப்புப் பயணி கள் தங்கும் அறையில் காத்திருக்குமாறும் நான் ஒரு மாணவனை அனுப்புவதாகவும் எழுதியிருந்தேன். அவரை மாணவனுக்கு அடையாளம் தெரிய வேண்டுமே. ஏதோ ஓர் ஆண்டறிக்கையின் அட்டையில் டாக்டர். மு. வ. , பேராசிரியர் ரா. பி. சேதுப்பிள்ளை ஆகிய இருவர் ஒளிப் படங்கள் (பாஸ்போர்ட் அளவில்) இருந்தன. அப்போது பள்ளியிறுதி வகுப்பில் படித்துக் கொண்டு இருந்த இராச மாணிக்கம் (மகாதேவி என்ற ஊரைச் சேர்ந்தவன்) என்ற மாணவனை இந்த அறிக்கையைக் கொடுத்து அடையாளம் கண்டு கொள்ளுமாறு அனுப்பியிருந்தேன். டாக்டர் மு. வ. சிரமமின்றித் துறையூர் வந்து சேர்ந்தார் முற்பகல் 8.30க்கு. அந்தக் காலத்தில் பள்ளியின் ஆண்டுவிழா கோவில் பெருவிழா (பிரம்மோற்சவம்) போல் நடைபெறும். கொட்டகை அமைத்து ஒரு மாநாட்டுக்கு ஏற்பாடு: செய்வது போல் செய்வேன். திருச்சியிலேயே காலைச் சிற்றுண்டியை முடித்துக் கொண்டு வந்திருந்தபடியால் குளிர்பானம் வழங்கிப்பள்ளியைச் சுற்றிபார்க்கஅழைத்துப் போனேன். பள்ளி வளர்ந்த வரலாற்றை எடுத்துக் கூறி னேன். சிற்றுாரில் இவ்வளவு சிறப்பாகவும் உற்சாகமாகவும் ಹುಣಿತ தொண்டில் ஈடுபட்டிருந்த என்னை மிகவும் பாராட்டினார். ஒவ்வோர் ஆண்டுவிழாவிலும் பள்ளி' ஆண்டு அறிக்கை அச்சிட்டு வழங்குவதை வழக்கமாகக்