பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் மு. வரதராசனார் 21.இ. கொண்டிருந்தேன். அதில் பள்ளித் தொடக்கம் முதல் அன்று வரை அது வளர்ந்த வரலாறு கூறப் பெற்றிருக்கும். சென்னையில் கூட பள்ளி ஆண்டுவிழாக்களில் இத்தகைய ஏற்பாடுகளைக் கண்டதில்லை என்று வியந்து கூறினார். ஆண்டுவிழாவில் திருமணத்திற்கு வருவது போல்இல்லை ஒர் மாநாட்டிற்கு வருவது போல்-ஊர்ப் பெருமக்கள் திரண்டு எழுந்தருளியிருப்பதைக் கண்டு வியந்து போனார். அறிக்கை படித்தல், பரிசுகள் வழங்கல், சொற்பொழிவுகள் நிறைவு பெறுதல்-இவை நடைபெற்ற வுடன் நாடகம் ஒன்று நடைபெறும். இவை எல்லாம் (4-30-7-30)க்குள் நடைபெற்று முடிந்து விடும். உணவு முடிந்து (என் வீட்டில்தான் பத்து பேருக்கு) இரவு ஒன்பது மணிக்குள் திருச்சி சந்திப்பில் கொண்டு சேர்க்குமாறு என் அருமை நண்பர் திரு மணவாளனிடம் (பேருந்து ஒட்டி) சொல்லியிருந்தேன். அவரும் அங்ங்னமே கொண்டு சேர்த்து விட்டார். இப்படி டாக்டர் மு. வ. விடம் ஏற்பட்ட தொடர்பு அவர் திருநாடு அலங்கரிக்கும் வரைதொடர்ந்து நடைபெற்றது. நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடையாளர் தொடர்பு (குறள்-783) என்ற குறளின் உண்மையை இருவருமே அறிந்து கொண் டோம். நிறை நீர நீரவர் கேண்மை பிறை (குறள்-783) என்ற வள்ளுவர் கூற்றுக்கிணங்க எங்கள் நட்பு வளர்ந்தது. ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொண்டோம். 1950-ஜூலை முதல் காரைக்குடியில் அழகப்பர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக என் பணி தொடங்கியது. 1953 முதல் சென்னைப் பல்கலைக் கழக கல்வி ஆலோசனைக் குழுவிலும் (Academic Council), பேரவையிலும் (Senate) உறுப்பின னாகத் தேர்ந்தெடுக்கப் பெற்றேன். மூன்றாண்டுகள் இப்பதவிகள் நீடித்தமையால் 1956-மார்ச்சு முடிய அடிக்கடிச் சென்னை