பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் மு. வரதராசனார் 22 o' காரைக்குடி பயிற்சிக் கல்லூரியில் கற்பித்த அநுபவத்தை யொட்டி கடுமையான உழைப்பினால் தமிழ் பயிற்றும முறை அறிவியல் பயிற்றும் முறை’, ‘கல்வி உளவியல் கோட்பாடுகள்' , ' கவிதை பயிற்றும் முறை போன்ற ஆசிரியர்கட்குப் பயன்படும் நூல்களை பெரிய அளவில் எழுதி வெளியிட்டேன். எனக்குப் பிறகு எத்தனையோ பயிற்சிக் கல்லூரிகள் தோன்றியிருந்தும் இத்தகைய எழுதி வெளியிடுவதில் ஒரு தேக்கம் ஏற்பட்டு விட்டது. டாக்டர் மு. வ. வின் பிஎ ச். டி. ஆய்வுக் கட்டுரை * சங்க இலக்கியங்களில் இயற்கை என்ற பொருள் பற்றியது. கட்டுரை ஆங்கிலத்தில் அமைந்தது. இந்த ஆய்வு நடத்திக் கொண்டிருந்த பொழுது (1945.50) என்பதாக நினைவு. சங்க இலக்கியங்கள் பொது மக்களுக்கு அறிவிக்கும் பாங்கில் குறுந்தொகை விருந்து' , 'கற்றிணை விருந்து' , 'நெடுந் தொகை விருந்து'களும், இதே நூல்களின் விளக்கங்களும் அமைந்தன. இக்காலத்தில் தான் கவிஞன் உள்ள ம்’ (1949) என்ற என் நூலும் தோன்றியது. இதனைப் படித்துப் பார்த்த டாக்டர் மு. வ. அவர்கள் *நன்றாகச் சுவைக்கும் பாங்கில் சங்கப் பாடல்களின் விளக்கம் அமைந்துள்ளன. தொடர்ந்து எழுதுங்கள். சொற்பொழிவுகட்குப் போகும் வேலையைக் குறைத்துக் கொள்ளுங்கள்’ என்று எனக்குக் கடிதமும் எழுதினார். நான் காரைக்குடியில் பணியாற்றியபோது சங்கப் பாடல் களை விளக்கும் பாங்கில் பல கட்டுரைகள், மதுரையி லிருந்து வெளிவந்த தமிழ்நாடு ஞாயிறு மலரில்) வெளி யாயின. இவற்றைத் தொகுத்து நூல் வடிவம் பெறச் செய்யுமாறு பல நண்பர்களும் சுவைஞர்களும் பல கடிதங் கள் எழுதியதைக் கண்டு இக்கட்டுரைகளைத் தொகுத்து. காதல் ஓவியங்கள்’ (1961) என்ற தலைப்பில் நூல் வடிவம் பெறச் செய்தேன். இக்காலத்தில்தான் கி. வா. ஜகந்நா தனின் சங்க நூல் காட்சிகள்’ என்ற தொடரில் எட்டு நூல் கள் வெளி வந்தன. இவை யாவும் சங்க இலக்கியங்களைப்