பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 மலரும் நினைவுகள் பொதுமக்கட்கு விளக்கும் பாங்கில் அமைந்தன: இத்துறையில் என் பணி மு. வ. வின் அடிச்சுவட்டை யொட்டி அமைந்தது என்பேன், இக்காலத்தில் பிஎச்.டி. பட்டம் பெற்றவர்கள் தாம் எடுத்துக் கொண்ட தலைப்பில் தொடர்ந்து பொது மக்களுக்குப் பயன்படும் பொருட்டு நூல்கள் எழுதுவ தில்லை. டாக்டர் மு. வ. வின் வழியை எவரும் பின்பற்ற வில்லை. தாமாகவும் ஆராய்ச்சியைத் தொடர்ந்து நடத்துவதில்லை. பட்டம் பெற்றவுடன் எல்லாம் தமக்குத் தெரியும்’ என்ற மனநிலை பெரும்பாலோருக்கு வந்து விடுகின்றது போலும். நான் பிஎச். டிக்கு ஆராய்வதற்கு எடுத்துக் கொண்ட தலைப்பு *தாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் நம்மாழ்வாரின் தத்துவம்' என்பது. என் கட்டுரையும் (மிகப் பெரிய அளவில்- அச்சில் 900 பக்கங்கட்கு மேல்) ஆங்கிலத்தில் தான் அமைந்தது. சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த் துறையில் முதன் முதலாக டாக்டர் பட்டம் பெற்றவர் டாக்டர் மு. வ. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த் துறையில் முதன் முதலாக டாக்டர் பட்டம் பெற்றவர் டாக்டர் அ. சிதம்பரநாதன் செட்டியார். இவர்கள் இருவரும் துறைத் தலைவர்களாக எளிதில் முடிசூட்டப் பெற்றவர்கள். டாக்டர் செட்டியா ரின் ஆய்வுக் கட்டுரையும் ஆங்கிலத்தில் தான் அமைந்திருந் தது. திருப்பதியில் துறைத் தலைமை எனக்குக் கிடைக்கா மலிருக்கும் பொருட்டுச் சில தமிழ்ப் பேராசிரியர்கள் வல்லுநர்குழுஉறுப்பினர்களாகவந்து கட்டியங்காரர்களாக வும் குடிலன்'களாகவும் மாறிச் செய்து வந்த சூழ்ச்சியை முறியடிப்பதற்கு நான் மேற் கொண்ட முயற்சி பகீரதப் பிரயத்தனத்திற்கும் மேற்பட்டது. என் துறையிலேயே பணியாற்றி வந்த என் நண்பரே ஆந்திர அரசில் என். டி. ராமராவுக்கு எதிராகத் தோன்றிய ஒரு பாஸ்கரராவ்போல் எனக்கே குழி பறித்தார். சாதிப்