பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் மு. வரதராசனார் 罗多歌 பின்னணி இவருக்கு இருந்தது. நான் இதை எப்போதும் விரும்பாதவன். ஏழுமலையானின் திருவருளால் தன்னந் தனியனாக நின்று இக்குழி பறிக்கும் செயலைத் தடுத்து நிறுத்தி வாகை குடினேன். ஒரு சமயத்தில் டாக்டர் மு. வ. வின் துணையும் ஒரளவு எனக்கு உதவியாக இருந்த தையும் நின்ைவு கூர்கின்றேன். நம்மாழ்வார் தத்துவத்தை ஆய்ந்து பட்டம் பெற்ற பிறகு யான் வாளா இருக்க வில்லை. அதனைத் தொடர்ந்து மேற்கொண்டு என் ஆராய்ச்சி பொது மக்களுக்குப் பயன்படும் முறையில் அமைய வேண்டும் என்று கருதினேன். 1964-இல் என் ஆய்வைத் தொடங்கும் போதே 108 வைணவத் திருத்தலங்களைச் (திவ்விய தேசங்களைச்) சேவிக்க வேண்டும் என்று திட்டம் போட்டு 1970-க்குள் இத்திட்டத்தை நிறைவேற்றினேன். இத்திருத் தலங்கள் பற்றி ஆழ்வார் பாசுரங்களின் விளக்கங்களுட னும் சில வைணவ தத்துவங்களைச் சுட்டும் பாங்கிலும் ஆறு நூல்களை வெளியிட்டேன். இவைத் தவிர முத்தி நெறி, சில நோக்கில் நாலாயிரம்' ஆன்மிகமும் அறிவிய லும் என்ற நூல்களையும் வெளியிட்டேன். தொடர்ந்து விட்டு சித்தன் விரித்த தமிழ், ஆழ்வார்களின் ஆரா அமுது', சடகோபன் செந்தமிழ்', 'கலியன்குரல்’ என்ற நூல்களும் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவந்தன. இவை யாவும் பொது மக்கள் படிக்க வேண்டும் என்ற கருத்தில் ஏழுமலையான் திருவருளால் வெளி வந்தவை. நான் திருப்பதிக்குச் சென்ற பிறகு (1960), டாக்டர் மு. வ. வும் சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராசிரியராகவும் துறைத் தலைவராகவும் (1960 முதல் என்பதாக நினைவு) பணியேற்றார். திருப்பதியில் தமிழ்த் துறையில் எம். ஏ. , பிஎச். டி படிக்கும் வசதிகள் 1970 முதல் தான் தொடங்கின, திருவேங்கடவன் பல்கலைக் கழகத்தில் 1966-முதல் பாட நூல் குழுவின் (Board of studies) தலைவராகவும்