பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் மு. வரதராசனார் 225 துறைக்கும் பெருமை சேர்வதாக அமையும்’ என்று எழுத, நூலும் 1965-இல் பல்கலைக் கழக வெளியீடாக வெளி வந்தது. 1950-வாக்கில் பச்சையப்பன் கல்லூரியிலிருந்து விடுப்பும் மீள் உரிமையும் (Lieli) பெற்று சென்னைப் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராக (Senior Lecturer) பணியாற்றினார் டாக்டர் மு.வ. அப்பொழுது தான் அவருடைய புதினங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவந்த காலம். அப்பொழுது ரா. பி. சேதுப்பிள்ளை இணைப்பேராசிரியராக இருந்தார். டாக்டர் ஏ.இலக்கு மணசாமி முதலியார் துணைவேந்தர். திரு. பிள்ளையவர் கள் உருப்படியான ஆராய்ச்சி என்று சொல்லத்தக்கதாக ஒன்றும் செய்ததாகத் தெரியவில்லை. பேச்சில் சதுரர்: கவர்ச்சிகரமாக சொல்நயத்துடன் சொற்பொழிவுகள் ஆற்றி சொல்லின் செல்வர் என்ற விருதையும் பெற்றுத் திகழ்ந்தவர். பல்கலைக்கழக நிர்வாகம் புதினங்கள் ஆராய்ச்சியில் சேரா; ஆகவே, அவற்றை எழுதுவதை நிறுத்தி ஆராய்ச்சியில் இறங்கவேண்டும் என்ற கருத்தைக் குறிப்பாக உணர்த்தியது. புதிய படைப்புகளைச் செய்து வந்த டாக்டர் மு.வ. வின் திறமையை-புதுப்போக் குடைமையை-பல்கலைக் கழகம் உணர்ந்ததாகத் தெரிய வில்லை. நிலைமையை நன்கு உணர்ந்த டாக்டர் மு.வ. தனது உடல் நிலைக்குக் கடற்காற்று ஒத்துவரவில்லை என்று காரணம் காட்டி பல்கலைக்கழகப் பணியைத் துறந்து மீண்டும் (மீள் உரிமை இருந்ததால்) பச்சையப்பன் கல்லூரிப் பணியிலேயே வந்து சேர்ந்து விட்டார். பல்கலைக்கழக நிர்வாகம் பாயின் அடியில் பாய, டாக்டர் மு. வ. கோலத்தில் அடியில் பாய்ந்து விட்டார்: ரா.பி. சேதுப்பிள்ளை பணியாற்றிய காலத்தில் இந்திப் பேராசிரியர் எஸ். சங்கராஜு நாயுடு அவர்களைத் தவிர, பிஎச்.டி பட்டம் ஒருவரும் பெறவில்லை. சிலர் எம்.லிட், பட்டங்கள் பெற்றனர். அக்காலத்தில் ஆராய்ச்சிப்பட்டத் ம நி-15,