பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

慧意税 மலரும் நினைவுகள் தில், இப்போதிருப்பதைப் போல, மோகமும் அதிகம் இல்லை. இந்தக் காலத்தில் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம்தமிழ் அகராதித்திட்ட வேலை தொடங்கப் பெற்று விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. டாகடர் அ.சிதம்பர ஈாதன் செட்டியார் அதன் பதிப்பாசிரியராகப் பணியாற்றி வந்தார். இந்தப் பணி ஒருவாறு நிறைவு பெற்றது. டாக்டர் செட்டியாருக்கு இனி ஒரு வேலை வேண்டும். ரா.பி.சேதுப்பிள்ளையும் ஒய்வு பெற்றார். டாக்டர் செட்டியாருக்குப் பிள்ளையவர்கள் வகித்த பதவியின் மீது குறியிருந்தது. துணைவேந்தர் டாக்டர் முதலியாரைப் பார்த்து தான் பேராசிரியர் வேலைக்கு விண்ணப்பிக்க லாமா? என்று இசைவு கேட்டார். எதிர் மறையில் மறுமொழி பெற்றார். பின்னர் மதுரைத் தியாகராசர் கல்லூரியில் முதல்வர் பணி ஏற்றார். துணைவேந்த்ர் முதவியார் ரா.பி.சேதுப்பிள்ளையவர்களை டாக்டர் மு.வ.விடம் தூது அனுப்பி பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பிக்குமாறு செய்து அவருக்கு அப்பதவியை நல்கினார். டாக்டர் மு.வ. வும் அப்பணியில் வந்து அமர்ந்தார். ஒரு காலத்தில் புதினப் படைப்புக்குத் தடை விதித்த அதே துணைவேந்தர் பின்னர் மு.வ. விற்கு அழைப்பு அனுப்பியதன் காரணம் என்ன? கடற்காற்று தன் உடல் நிலைக்கு ஒத்துவராது என்று சொல்லிச் சென்ற டாக்டர் மு.வ திரும்பவும் பல்கலைக் கழகத்தில் பணியேற்றதன் காரணமென்ன? இது தான் உலகியல். சமய சந்தர்ப்பங் களை அனுசரித்து வாழவேண்டும் என்பது நாம் இந்த சூழ்நிலையிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடம். தன்னம்பிக்கையையும் தகுதித் திறனையும், கடுமையான உழைப்பையும் இயல்பாகப் பெற்ற டாக்டர் மு.வ. வால் இதை அனுசரிக்க முடிந்தது. இத்தகைய பண்புகள் வாய்க்கப் பெற்றவர்கள் இக்காலத்தில் மிக அரியராயினர்.