பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலரும் நினைவுகள் 念慧豹 என்ற ஒளவைப் பாட்டியின் திருவாக்கும் நினைவிற்கு, வருகின்றது. 1967 பிப்பிரவரி என்பதாக நினைவு. திருப்பதியில் நடைபெற்ற திருமணம் ஒன்றிற்கு டாக்டர் மு. வ. வந்திருந்தார். பெங்களுரிலிருந்து திரு. தண். கி. வேங்கடாசலம் (தமிழ்ப் பேராசிரியர், பெங்களுர் புனித சூசையப்பர் கல்லூரி) என்பாரும், சித்துரிலிருந்து திரு பொன். செளரிராசனும் (தமிழ்ப் பேராசிரியர் சித்துரர் அரசினர் கல்லூரி) அதே திருமணத்திற்கு வந்திருந்தனர். டாக்டர் மு. வ. விற்கு அருவியில் நீராடுவதில் கொள்ளை ஆசை. சென்னையில் குழாய் நீரில்- நீர்த்தாரையில் (shower) குளித்தாலும்-அருவியில் நீராடும் சுகம் கிடைக் குமா? அதுவும் சங்க இலக்கியத்தில் தோய்ந்த டாக்டர் மு. வ. வின் தமிழ் உள்ளம் தோழியும் தலைவியும் நீராடிய எண்ணற்ற அருவிகளைக் கற்பனையில் கண்டிருக்கு மல்லவா? ஆகவே, இந்த உள்ளம் திருப்பதியில் கபில தீர்த் தத்தில் நீராட விரும்பியதில் என்ன வியப்பு? நான் அப்போது கபில தீர்த்த சாலையில் உமா மகேசுவரெட்டி குடியிருப்பில் குடும்பத்துடன் தங்கியிருந்: தேன். டாக்டர் மு. வ. திரு. ரெட்டியார் அதிகாலையில் நான்கு மணிக்கே துயிலெழும் வழக்கமுள்ளவர். இப்போது சென்றால் கதவைத் தாழிட்டுக் கொண்டு ஆராய்ச்சிக் கட்டுரை எழுதிக் கொண்டிருப்பார்: அல்லது தம் இளைய மகனுக்குப் பாடம் பயிற்றிக் கொண்டிருப்பார், நாம் நம் வருகையை திருப்பாவை பாடி வியக்க வைப்போம்: என்று திட்டமிட்டார் போலும். ஆகவே ஏனைய இரு நண்பர்களுடன் சுமார் அதிகாலை 4-30க்கு என் இல்லம் அடைந்து, ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீர் ஆடினால் திங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து ஓங்குபெருஞ் செந்நெலூடு கயல் உகளப்