பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உாக்டர் மு. வரதராசனார் 229. -حساسیتیوی பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத் தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளற் பெரும் பசுக்கள் நீங்காத செல்வம் நிறைந்து ஏலோர் எம்பாவாய் ’ என்ற திருப்பாவை பாடினார்கள். முதலில் இந்தப் பாசுர ஒலி என்னை வியக்க வைத்தாலும், இந்தக் கூட்டொலியிலும் டாக்டர் மு. வ.வின் குரலும் திரு செளரிராசனின் குரலும் தனித்து வேறுபடுத்திக் காட்டின. ஆதலால் பாசுரம் முடியும்வரையில் காத்திருந்து பின்னர்க் கதவைத் திறந்தேன். அனைவரும் மகிழ்ந்தோம், நானும் அவர்களுடன் சென்றேன். எல்லோரும் ஆனந்தமாக அருவியில் நீராடித் திரும்பி னோம். இந்தக் காட்சி இன்று நடப்பது போல் உள்ளது. தமிழக அரசுக்குப் பத்தாண்டு நான் காவடி எடுத்த பிறகு திருவேங்கடவன் பல்கலைக் கழகத்திற்குத் தமிழ் வளர்ச்சிக்கென ஆண்டொன்றுக்குப் பத்தாயிரம் ரூபாய் வீதம் ஓர் ஐந்தாண்டிற்கு நிதி வழங்கியது. இஃது அரசுக் கொள்கையாக இருந்ததால் இதை நம்பி திருப்பதியில் தமிழ் வளர்க்கலாம் என்ற நல்லெண்ணத்தால் காரைக்குடி யில் பேராசிரியர் பதவியைத் துறந்து திருப்பதிக்குச் சென்றேன். ஆகூழ் எனக்கு இல்லை. என் சாதகத்தில் ஒரு குண்டுசியை எடுக்க வேண்டுமானாலும் ஒரு யானையைக் கூட்டிக் கொண்டு வரவேண்டும். யானையும் கிடைப்ப தில்லை; குண்டுசியும் கிட்டுவதில்லை! திருப்பதிக்கு வந்த பிறகு கடினமாக உழைத்தேன்; ஏற்கெனவே ஏழு பெரிய நூல்களைப் படைத்திருந்த நான் திருப்பதிக்கு வந்த பிறகு மூன்று பெரிய நூல்களையும் பத்துக்கு மேற்பட்ட சிறிய நூல்களையும் படைத்தேன். நூற்றுக்கணக்கான ஆய்வுக் கட்டுரைகளை எழுதிக் குவித்தேன். இருபதாண்டுக் காலம் பிஎச். டிக்கு பதிவு பெறுவதில் முயன்று பயனற்றுப் போன தால் திருப்பதியிலும் நான்கு ஆண்டுகள் பகீரதப் பிரயத் .ே திருப்பாவை-3