பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

慧器翰 மலரும் நினைவுகள் தனத்திற்குப் பிறகு ஆய்வு செய்ய இசைவு பெற்று டாக்டர் பட்டமும் பெற்றேன். இவற்றையெல்லாம் டாக்டர் மு. வ. நன்கு அறிவார்-நான் அவரிடம் தொடர்பு வைத்துக் கொண்டிருந்ததால். தமிழக அரசு 1969 நவம்பரில் நிதி வழங்கியதால் அந்த ஆண்டு திருவேங்கடவன் பல்கலைக்கழகத்தில் தமிழ் முதுகலை வகுப்பு தொடங்க முடியவில்லை. 1970-ஜுன் முதல்தான் வகுப்புகள் தொடங்கப் பெற்றன. இதை எதிர் பார்த்து மார்ச்சு-ஏப்பிரலிலேயே தமிழ்த் துறைக்கு ஒரு பேராசிரியர், ஓர் இணைப்பேராசிரியர் (Reader), ஒரு விரிவுரையாளர் பதவிகட்கு விளம்பரம் செய்யப்பெற்றது. பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பிப்போர் பிஎச்.டி. பட்டம், பத்தாண்டுகள் முதுகலை வகுப்புகட்குக் கற்பித்த அநுபவம். பிஎச்.டிக்கு வழிகாட்டிய அநுபவமும்; இணைப் பேராசிரியருக்கு விண்ணப்பிப்போர் பி எச். டி. பட்டம், ஐத்தாண்டுகள் முதுகலைவகுப்புக்குக் கற்பித்த அநுபவம், பீ.எச்.டிக்கு வழிகாட்டிய அநுபவமும்; விரிவுரையாளருக்கு விண்ணப்பிப்போர் எம். ஏ., குறைந்தது இரண்டாம் வகுப்பில் (B+) தேறியவராகவும், சில ஆண்டுகள் கற்பித்தல் அநுபவமும் பெற்றிருத்தல் வேண்டும் என்ற விதிகளுடன் விளம்பரம் வந்திருந்தது. இத்தகுதிகள் அக்காலத்தில் டாக்டர் மு. வ. வுக்கு மட்டிலும் தான் இருந்தது. விண்ணப்பித்தவர்களுள்ளும் ஒருவருக்கும் இத்தகுதிகள் இல்லை. அக்காலத்தில் திருவேங்கடவன் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்தவர் டாக்டர் D. செகந்நாதரெட்டி. விண்ணப்பங்களைப் பரிசோதித்து ஒருவருக்கும் விளம்பரத்தில் குறிப்பிட்ட தகுதிகள் இல்லாமையை அறிந்தார். 1970- மேதிங்களில் இந்தியப் பல்கலைக்கழகத் தமிழா சிரியர்களின் மாநாடு திருச்சியில் நடைபெற்றது. இதற்குப் புனித சூசையப்பர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப் பெற்றி