பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் மு.வரதராசனார் 33 I ருந்தது. உண்டி, உறையுள் முதலிய வசதிகள் புனித சூசையப்பர் கல்லூரி உணவு இல்லத்தில் (Boarding House) வசதிகள் செய்யப்பெற்றிருந்தன, டாக்டர் மு. வ. ((அப்போது சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர்) வந்திருந்தார். நானும் திரு T. J. இரகுபதி யும் (சித்துார் அரசினர் கல்லூரித் தமிழ் விரிவுரையாளர்) மாநாட்டிற்கு வந்திருந்தோம். இந்த மாநாட்டைத் தொடங்கி வைத்தவர் சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் நெ. து. சுந்தர வடிவேலு அவர்கள். இஃது இரண்டாவது மாநாடு. அப்பொழுதுதான் டாக்டர் D. செகந்நாத ரெட்டி திருவேங்கடவன் பல்கலைக்கழகத் தில் 1979-71இல் தொடங்க இருக்கும் முதுகலை வகுப் பிற்கு பேராசிரியராக நியமனம் பெறுவதற்குத் தக்கார் ஒருவரைப் பரிந்துரைக்குமாறு திரு நெ. து. சுந்தர வடிவேலு அவர்கட்கு எழுதியிருந்ததாகவும், அவரும் திரு மு. வ. வைக் கலந்து திருவேங்கடவன் பல்கலைக் கழகம் கருதுகிற அளவிற்கு ஒருவரும் இலர் என்றும் அங்குப் பணி யாற்றும் நானே அதற்குத் தகுதியானவர் என்றும், எழுதி விட்டதாக அறிந்தேன். திருச்சியில் நாங்கள் தங்கியிருந்த போது டாக்டர் மு.வ. விற்குக் காவிரியில் நீராட வேண்டும் என்று விரும்பினார்: விருப்பத்தை என்னிடம் தெரிவித்தார். நானும் திரு N. இராசகோபாலனும் (திருச்சி தேசியக் கல்லூரித் தமிழ் விரிவுரையாளர்) இன்னும் பல தமிழாசிரியர்கள் புடைசூழ அதிகாலை ஐந்து மணிக்கே புறப்பட்டு காவிரிக்குச் சென்றோம். வெள்ளம் பெருக்கெடுக்காத காலமாக இருந்ததால் ஆற்றின் நடுவில் ஒடிக் கொண்டிருந்த தெளிந்த நீரோடைக்குச் சென்றோம். ஆனந்தமாக நீராடி னோம். அடிக்கடி டாக்டர் மு.வ. என்னைச் சீண்டுவார்; நானும் பல நகைச்சுவை நிகழ்ச்சிகளை உதிர்ப்பேன். அனைவரும் மகிழ்வார்கள். ஆற்றில் நடைபெற்ற உரையாடலில் அதிகமாகப் பங்கு பெற்றவர்கள் நானும்