பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

意器发 மலரும் நினைவுகள் திரு. இராச கோபாலனும் தான். சென்னையில் குழாய் நீரில் குளித்த டாக்டர் மு. வ. ஆற்று நீரில் மிக்க மகிழ்ச்சி யுடன் நீராடியதைக் கண்டோம். இடுப்பளவு ஆழம் உள்ள இடத்திற்குச் சென்று முழுகி முழுகி நீராடியதைக் கண்ட போது மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக் கையாற் குடைந்து குடைந்து * என்ற மணிவாசகப் பெருமானின் திருவெம்பாவை அடிகள் தினைவிற்கு வரும். நாங்கள் நீராடின காலம் கோடையா தலால் அதிக நேரம் நீரில் விளையாடினோம். குறிப்பிட்ட நாளில் (ஆகஸ்டில் என்பதாக நினைவு) பேட்டி தடையெற்றது. பேட்டியின் விவரங்கள் பிறி தோரிடத்தில் கூறப் பெற்றுள்ளன. வல்லுநர் குழுவில் டாக்டர் மு.வ. (அப்போது சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராசிரியர்), திரு. தெ. பொ. மீனாட்சி சுந்தர னார் (மதுரைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர்) இடம் பெற்றிருந்தனர். டாக்டர் தா. ஏ. ஞானமூர்த்தி (கோவை பூ. சா. கோ. கலைக் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர்), திரு. கு. தாமோதரன் (அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ் விரிவுரையாளர்). நான் (திருவேங்கடவன் பல்கலைக் கழகத்தில் பத்து ஆண்டுகள் தமிழ் விரிவுரை யாளர்) ஆகிய மூவர்தாம் பேட்டியில் கலந்து கொண்டோம். எங்களைப்பற்றியும் சிறிது சொல்ல வேண்டும். டாக்டர் தா. ஏ. ஞானமூர்த்திக்கு ஆறு திங்கள் முதுகலை வகுப்பு கற்பிக்கும் அநுபவம் இருந்தது. இன்னும் ஆறு திங்களில் ஒய்வு பெற வேண்டியவர். நூல்கள் வெளியிட்டதாகத் தெரியவில்லை. திரு. கு. தாமோதரன் எம். ஏ. வகுப்புகள் உள்ள அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலிருந்து வந்தவராதலால் பதினோர் 4. திருவேம்பாவை-11