பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் மு. வரதராசனார் 233。 ஆண்டுகள் எம்.ஏ.வகுப்பு கற்பித்த அநுபவம் இருப்பதாகச் சொல்லிக் கொள்ளுகின்றார். (இஃது ஏழுமலையானுக்கு தான் வெளிச்சம்). இவருக்கு டாக்டர் பட்டம் இல்லை; எம்.லிட். பட்டம் இருந்தது. ஒரு நூல் கூட வெளியிட வில்லை. திரு . தெ. பொ. மீ. ஞானமூர்த்தியை ஐந்து ஆண்டுகள் ஒப்பந்த முறையில் பேராசிரியராக அமர்த்தி விடலாம் என்றும், திரு. கு. தாமோதரனை இணைப் பேராசிரியராக்கி விடலாம் என்றும் முடிவுடன் வந்திருந்த தாகப் பின்னர்தான் அறிய முடிந்தது. பேராசிரியர் நியமனத்திற்கு வல்லுநர் குழுவில் மூவர் இருக்க வேண்டும் என்பது பல்கலைக் கழகத்தின் விதி. குழுவில் இருவரே இருந்ததால் பேராசிரியருக்குரிய இடம் நிரப்பப் போவ தில்லை என்பது எனக்குத் தெளிவாயிற்று. ஆனால் திரு. தெ.பொ.மீ. க்குத் தெளிவாக வேண்டுமே, வாயடி கையடியால் டாக்டர் D.செகந்நாத ரெட்டியை மயக்கித் தன் குறிக்கோளை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்ற தீர்மானத்தில் இருந்தார். ஆனால் டாக்டர் D.செகந்நாத ரெட்டி சட்ட வரம்பை மீறாதவர். பேராசிரியர் பதவியை நிரப்பப் போவதில்லை என்று உறுதியாகச் சொல்லி விட்டார். ஆனால் டாக்டர் ஞானமூர்த்தி துணைப் பேராசிரியர் பதவி தமக்கு வேண்டியதில்லை என்ற உறுதி யுடன் இருந்தார். துணைப் பேராசிரியர் ஊதியத் திட்டம் 700-1250. இதில் 1250). தருவதாகக் கூட ஆசை காட்டியும் அவர் அதற்கு ஒருப்படவில்லை. பேட்டி முடிந்து வெளி வந்ததும் நேராக என்னிடம் வந்து கை குலுக்கி தாம் வரப் போவதில்லை என்றும் 'நீங்களே தலைமைப் பதவி வகித்து திறம்பட நடத்துங்கள்' என்று வாழ்த்தி விட்டுப் போனார். ' வரவில்லை என்பதாக ஒரு கடிதம் தந்து விடுங்கள்' என்றேன். கோவை சென்று அங்கிருந்து எழுதுவதாகச் சொல்லிச் சென்றார். (திரு. தெ. பொ. மீ. கோவை சென்று மனைவியுடன் கலந்து யோசித்து எழுதும்படி