பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

感器套 மலரும் நினைவுகள் வற்புறுத்தியதாகப் பின்னர் அறிந்தேன்). என்னுடைய பேட்டியும் திரு. தாமோதரன் பேட்டியும் முடிந்தன. நீர்மானம் போடும்போது (1) டாக்டர் தா. ஏ. ஞான மூர்த்தியை இணைப் பேராசிரியராகவும் துணைத் தலைவ ராக நியமிப்பதென்றும்,அவர் வராவிட்டால் (2) என்னை யும் (3) திரு. தாமோதரனையும் இணைப் பேராசிரியர் களாகவும் நியமித்து திரு. தாமோதரனைத் துறைத். தலைவராக ஆக்க வேண்டும் என்று திரு. தெ. பொ. மீ. வற்புறுத்தினாராம். ஆனால் டாக்டர் மு. வ. அதை மறுத்து, 'டாக்டர் ரெட்டியார் இல்லாவிட்டால் இங்குத் தமிழ்த் துறையே ஏற்பட வாய்ப்பிராது. நாம் கூடி யிருக்கும் இந்தக் குழுவிற்கும் வேலையிராது. டாக்டர் ரெட்டியார் காரைக்குடியில் பேராசிரியர் பதவியைத் துறந்து (முதல்வராக வரக்கூடிய வாய்ப்பையும் விட்டொழித்து) தமிழக அரசின் கொள்கையைப் பயன் படுத்தித் தமிழ் வளர்ச்சிக்கென்று வழங்கப்பெறும் மானியத்தைப் பெற்று முதுகலை வகுப்பு தொடங்கலாம். என்று வந்தார். அப்பொழுது கல்வி -நிதி அமைச்சராக இருந்த திரு.சி. சுப்பிரமணியம் வழங்குவதற்குத் தயாராக வும் இருந்தார். ஏதோ ஒரு காரணத்தால் துணைவேந்தர் எஸ். கோவிந்தராஜுலு நாயுடு விண்ணப்பம் அனுப்பு வதற்கே தயங்கினார். இதற்குள் திரு. சி. சுப்பிரமணியம் நடுவண் அரசின் அமைச்சராகப் போய்விட்டார். டாக்டர் ரெட்டியார் விடாது வற்புறுத்தவே, தாம் கல்வி-நிதி அமைச்சராக இருந்த திரு. M. பக்தவத்சலத்தை நேரில் பார்த்து ஆவன செய்வதாகக் கூறி டாக்டர் ரெட்டி யாரின் வேண்டுகோளைத் தட்டிக் கழித்துவிட்டார். அடுத்து துணைவேந்தராக வந்த டாக்டர் W. C. வாமன் ராவ் அவர்களைச் சந்தித்து நிலைமையை விளக்கி (பதிவாளர் மறுத்ததையும் பொருட்படுத்தாது) விண்ணப்பம் அனுப்பச் செய்தார். பல ஆண்டுகள் தலைமைச் செயலகத்தில் (Secretariet) காவடி எடுத்து