பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் மு. வரதராசனார் 2 & 5 வட்டம் போட்டார். ரூ. 28861- வரைச் செலவழித்த விவரங்களையும் என்னிடம் சொன்னார். சென்னை வரும் போதெல்லாம் பல்கலைக் கழகத்தில் என்னைச் சந்திக்காமல் திருப்பதி திரும்பார். இந்தக் காலத்தில் கடுமையாக உழைத்து பிஎச்.டி. பட்டமும் பெற்றார். பிஎச்.டிக்கு பதிவு செய்து கொள்ள முடியாது (விதி இடம் கொடுக்காததால்) 25 ஆண்டுகள் தவித்ததை யான் அறிவேன். பெரியனவும் அருமையானவுமான இருபதிற்கு மேற்பட்ட நூல்களையும் வெளியிட்டிருக்கின்றார். திரு. தாமோதரனுக்குப் பிஎச். டி. பட்டமும் இல்லை; நூல் வெளியீடுகளும் இல்லை. வயதிலும் ஐந்தாறு ஆண்டுகள் இளையவரும் கூட. திரு. கு. தாமோதரனைத் துறைத் தலைவராக நியமிப்பதை வற்புறுத்தித் தீர்மானம் போட்டால் நான் கருத்து வேறுபாட்டுக் குறிப்பை (Dissenting note) தீர்மானத்தின் கீழ் எழுத வேண்டி. வரும். இந்த விவரம் தெரிந்ததும் டாக்டர் ரெட்டியார் மனமுடைந்து உயர்நீதி மன்றத்தில் ரிட்மனு போட்டு நம் தீர்மானத்தை உடைத்தெறிவார். நியாயத்தையும். மனிதாபிமானத்தையும் புறக்கணிப்பது அடாத செய லாகும்’ என்று கூறவே என்னைத் துறைத் தலைவராகப் போடுவதென்று தீர்மானம் எழுதப் பெற்றது. மேலும் டாக்டர் மு. வ, சொன்னது: இரண்டு துணைப் பேராசிரியர்கள் (பேராசிரியர் இல்லாத நிலை யில்) ஒரு துறையில் பணியாற்றுவது சரியன்று. திரு. தாமோதரனின் திறமையைக் கணிப்பதற்கு (பதினோர் ஆண்டுகள் முதுகலை வகுப்பு கற்பித்ததாகச் சொல்லிக் கொள்வதைத் தவிர) எந்த அளவுகோலும் இல்லை. இந் நிலையில் அவர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் வாங்கும் ஊதியத்திற்குமேல் ஓர் உயர்வுப்படி (Increment) தந்து விரிவுரையாளராக நியமிக்கலாம். எந்தத் தேதி யில் அவர் டாக்டர் பட்டம் பெறுகின்றாரோ அந்தத்