பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

諡、芭 மலரும் நினைவுகள் தேதியிலிருந்து (விண்ணப்பிக்காது-பேட்டியுமின்றி) இணைப் பேராசிரியராக உயர்த்தப்படுவார் என்ற குறிப்பையும் ஆணையிலேயே காட்டி ஆணை பிறப்பிக்க லாம்' என்று கூறினாராம். இதனால் எந்தச்சச்சரவுமின்றி துறையும் ஒழுங்காக இயங்கும் என்று கூறினாராம். தெ.பொ. மீ. இதற்கு ஒப்புக் கொள்ளாததால் இருவரை யும் இணைப் பேராசிரியர்களாக நியமித்தனர். இதன் விளைவு விரைவில் தமிழ்த்துறை குருட்சேத்திரப் போர்க் களமாயிற்று. டாக்டர் D. செகந்நாத ரெட்டி இதை உணர்ந்தாரோ என்பது தெரியவில்லை. ஆனால் தெ.பொ.மீ. இதை உணர்ந்ததாகத் தெரிந்தது. நான் ஒய்வு பெற்று இரண்டாண்டுக் காலத்தில் திரு. தாமோதரன் திருநாடு சென்றுவிட்டார். டாக்டர் P. செளரிராஜன் (துறைத் தலைவர்டபேராசிரியர்) மதுரைக்குப் போயிருந்தபொழுது தெ. பொ. மீ. அவரிடம் 'என்ன இருந்தாலும் திரு. தாமோதரன் டாக்டர் ரெட்டியாருக்கு இவ்வளவு தலைவலியை உண்டாக்க வேண்டியதில்லை. இப்பொழுது என்ன வாரிக் கட்டிக் கொண்டுவிட்டார்? டாக்டர் ரெட்டியாரிடம் பல்லாண்டுகள் பழகியிருந்தாலும் இப்பொழுதுதான் அவர் பெருமையையும் திறமையையும் அறிந்து மகிழ்கின்றேன்' என்றாராம். D 町 町 டாக்டர் மு. வ. வின் செயல்கள் ஒவ்வொன்றும் அவர்தம் நேர்மைக்கு எடுத்துக் காட்டாக அமையும். மனச்சான்று காட்டும் வழியில் செயற்படுபவர். ஒரு சமயம் உஸ்மானியாப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியர் தேர்ந்தெடுக்கும் நியமனக் குழுவில் இடம் பெற்றார். அந்தப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றும் இருவரிடையே பலத்த போட்டி இருந்தது. தம் வகுப்பைச் சார்ந்த ஒருவர் அவ்விருவரில் ஒருவர். ஐதராபாத்தில் செல் வாக்குள்ள அவர் சாதியினர் அவருக்குத் துணையாக