பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் மு. வரதராசனார் 2寻常” நின்றனர். சிலர் டாக்டர் மு. வ. வுக்கும் எழுதினர். நிலைமையை நன்குணர்ந்த டாக்டர் மு.வ. இந்தச் சூழலில் சிக்கிக் கொள்ள விரும்பவில்லை; ஒதுங்கிக் கொள்ளவே விரும்பினார். தமக்கு உடல்நலக் குறைவு என்று காரணம் காட்டி விலகிக் கொண்டார். போனால் தம் பெயர் கெடும் என்பதை நன்கு உணர்ந்தமையால் இவ்வாறு செய்தார். தமிழகத்திலிருந்து குழுவில் அமைந்த வேறு இருவர் தமக்குத் தெரிந்த ஒருவரை நியமனம் செய்யும் திருப்பணியில் ஈடுபட்டனர். (அந்த இருவரை யும் தவிர்க்க நினைத்தனர்). ஆனால் துணைவேந்தர் நேர்மையுடையவராதலால் (உச்ச நீதிமன்ற ஒய்வு பெற்ற நீதிபதி) இவர்கள் கருத்து நிறைவேறவில்லை. அந்த இருவரில் தகுதியானவருக்கே அப்பதவி கிடைத்தது. பேட்டிக்குத் திருப்பதி வந்து போன ஒன்றிரண்டுத் திங்களில் டாக்டர் மு. வ. மதுரைப் பல்கலைக் கழகத் துணைவேந்தராக நியமனம் பெற்றார். (இந்த நிலையைச் சூசகமாக அறிந்த திரு. தெ. பொ. மீ. தன்னுடைய பதவிக் காலம் முடிவதற்குப் 18 நாட்களுக்கு முன்ன தாகவே பதவியைத் துறந்தார். 1971-மே மாதம் தமிழ் எம்.ஏ. (போர்டு தேர்வாளர்கள்) கூடியது. நானும் அதில் இடம் பெற்றிருந்தேன். டாக்டர் மு. வ. துணை வேந்தரான பிறகு நாங்கள் முதன் முதலாகச் சந்திக் கின்றோம்; வாழ்த்துகின்றோம். கூட்டத்தன்று மதிய உணவின்போது எங்கட்குப் பெரிய விருந்தொன்று அளித்தார். அப்போது அவர், டாக்டர் ரெட்டியார், நீங்கள் பி.ஏ., பி. எஸ் சி. போர்டில் (வினாத்தாள். குறித்தல்) இருந்தீர்கள். உரிமை கொண்டு அதினின்றும் உங்களை நீக்கி, இந்தப் போர்டில் சேர்த்தேன். வேறொரு வருக்கு உதவுவதற்காக இதைச் செய்தேன். ஒரு சில: நூறு ரூபாய்கள் உங்கட்கு இழப்பாக இருந்தாலும் நீங்கள் அதைப் பொருட்படுத்த மாட்டீர்கள் என்பதை அறிவேன், கோபிக்கமாட்டீர்கள் என்பதும் எனக்குத் தெரியும்: