பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

意惑姆 . மலரும் நினைவுகள் என்று சொன்னார். போர்டில் இருந்த தமிழ்ப் பேராசிரியர்கள் எனக்கும் டாக்டர் மு. வ, ஷக்கும் உள்ள இணக்கமான உறவைக் கண்டு வியந்தார்கள். டாக்டர் மு. வ. எளிய வாழ்க்கையை விரும்புபவர். அளவறிந்து வாழ்பவர். துணைவேந்தரான பிறகும்கூட பாடநூல் குழு கூட்டத்திற்குச் சென்னையிலிருந்து வரும் போதும் திரும்பும்போதும் பேருந்தில்தான் வருவார்: திரும்புவார். திருமலை திருப்பதி தேவஸ்தான சத்திரத் தில் தங்குவார். ஒரு வேளையாவது என் இல்லத்தில் உணவு கொள்ளாது திரும்பார். சான்றோருடைத்து தொண்டை நாடு’ என்று புலவர்களால் போற்றப்பெறும் தொண்டை நாட்டைச் சார்ந்தவர் இவர். நல்லவர்; வல்லவர். உயர்ந்த குறிக்கோள் நெறியுடன் வாழும் சீலம் நிறைந்த நெஞ்சத்தினர். விளம்பரத்தை விரும்பாதவர்; அடக்கமான பண்பினர். சுமார் இருபத்தைந்து ஆண்டு களாக இத்தகையவருடன் நெருங்கிய உறவு கொண்டிருந் ததன் நினைவாக தொண்டை நாட்டுத் திருப்பதிகள்’ (ஆகஸ்டு-1973) என்ற என் நூலை, மங்கலப் புதினப் படைப்பினால் இளைஞர் மனத்தினைத் திருத்திய கலைஞன்; சங்கநூற் பொருளை யாவரும் உணரத் தகவொடு விளக்கிய செம்மல்; துங்கமார் மதுரைப் பல்கலைக் கழகம் துலக்குறும் தனித்துணை வேந்தன்: பங்கமில் உளத்தன்; தூயநன் மு.வ. பண்பினுக் குரியதிந் நூலே என்ற பாடலால் அன்புப் படையலாக்கி மகிழ்ந்தேன். துணைவேந்தராக இருந்தபோது மதுரைப் பல்கலைக் கழக வளாகத்தைப் பசுமைப் புரட்சி பெறச் செய்தார். சாலைகள் அமைத்தல், மரங்கள் நடுதல், பூங்காக்கள் அமைத்தல் போன்ற செயல்களால் பாலைவனம் போன்