பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. பேராசிரியர் அ. சீநிவாசராகவன் மகாகணம் சீநிவாச சாஸ்திரியாரை (முதல் துணை வேந்தர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்) பேச்சு நய gpaoLu G) &rTj)0uTg£}aufTsrff (Silver-tongue d Orator) என்று கேள்விப்பட்டதுண்டு. ஆனால் அவரை நேரில் பார்த்ததும் இல்லை; சொற்பொழிவைக் கேட்டதும் இல்லை. நாட்டுப் புறத்தில் கிணற்றுத் தவளை போல் வாழ்கின்றவர்கட்கு இத்தகைய வாய்ப்புகள் இருக்க முடியாதல்லவா? ஆயினும் கேள்விப் பட்டே அவரிடம் அதிக மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தேன். என் அரிய நண்பர் பேராசிரியர் அ. சீவாசராகவன் ஆங்கிலத் திலும் அருந்தமிழிலும் உரையாற்றினதைப் பலமுறை கேட்டு மகிழ்ந்துள்ளேன். கற்பனையில் மகாகணம் சாஸ்திரியாரைப் பற்றிக் கொண்டிருந்த மதிப்பீடும் பேராசிரியர் சீநிவாசராகவன் அவர்களின் உரைகளை நேரில் கேட்ட பிறகு அவர்களைப் பற்றிக் கொண்டிருக்கும் மதிப்பீட்டை ஒப்பிட்ட என் மனம் பேராசிரியர் சீநிவாச ராகவனை மிக்க பேச்சு நயமுடைய சொற்பொழிவாளர் (Gold tongued Orator) story arsol- Gust(\ffairspool. கண்ணுக்கு எடுப்பான தோற்றம், கேட்போர் காதிற்கு இனியகுரல், பழகுவதற்கு எளிமை, எல்லோருடனும் இன்முகத்துடன் உரையாடி அவர்கட்கு உவப்பூட்டும் பாங்கு -இவையனைத்தும் உருண்டு திரண்ட மாமேதையே பேராசிரியர் அ. சீநிவாசராகவன்.