பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

344 மலரும் நினைவுகள் இவரை முதன் முதலாகக் கண்டு பழகியது 1949பிப்பிரவரி மாதம் என்பது என் நினைவு. நாமக்கல் கழக உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் திரு பி.ஆர் சுப்பிரமணியத்தின் பொறுப்பில் சேலம் மாவட்ட ஆசிரியர்களின் மாநாடு நாமக்கல்லில் நடைபெற்றது. அந்த மாநாட்டைத்திறந்து வைக்கச் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பெற்றிருந்தார் பேராசிரியர் அ. சீநிவாச ராகவன் அவர்கள். எனக்கும் அழைப்பு வந்திருந்தமையால் நானும் மாநாட்டிற்குப் பார்வையாளனாகச் சென்றிருந்: தேன். அப்பொழுதுதான் திரு. பி.ஆர். சுப்பிரமணியம் என்னைப் பேராசிரியர் அ.சீ. இராகவனுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அப்பொழுது பேராசிரியர் இராகவன் சென்னை விவேகாநந்த கல்லூரியில் தாம் வகித்து வந்த ஆங்கிலப் பேராசிரியர் பதவியைத் துறந்து சிந்தனை’ என்ற திங்கள் இதழை நடத்திக் கொண்டிருந்தார். நான் அவரைச் சந்தித்தபோது தாம் கையில் வைத்திருந்த "சிந்தனை' இதழ் ஒன்றை எனக்குத் தந்தார். சிந்தனை யைத் துண்டும் பல தரமான இலக்கியக் கட்டுரைகளைத் தாங்கிக் கொண்டிருந்த ஏடாகத் திகழ்ந்திருப்பதைக் கண்டேன். துறையூர் திரும்பியதும் அந்த இதழுக்கு ஓராண்டு சந்தாத்தொகையை அனுப்பி வைத்தேன். ஓராண்டுக்காலம் அதிலுள்ள கட்டுரைகளைப் படித்து அநுபவித்தேன். நாமக்கல் ஆசிரியர் மாநாட்டைத் திறந்து வைத்து நிகழ்த்திய பேராசிரியரின் ஆங்கில உரை கேட்போர் கவனத்தை ஈர்த்தது. அவர்தம் இனியகுரலில் வெளிப் பட்ட ஆங்கில உரை அழகிய ஆங்கில மாது ஒருத்தி நடன மாடியது போன்று இனிமையாக இருந்தது. தமிழையும் முறையாகப் படித்து புலமை பெற்றவராதலால், ஆழ்வார் பாசுரங்களில் காணப்பெறும் இனிமையும் குழைவும் பேச்சில் நெளிந்தது. இப்படித்தான் வகுப்பும் எடுப்பார் என்றும், இவரிடம் பயிலும் வாய்ப்பு பெற்றவர்கள்