பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் அ. சீநிவாசராகவன் 逻45 பாக்கியசாலிகள் என்றும் நினைத்துக் கொண்டேன். திரு. பி.ஆர்.சுப்பிரமணியமும் இப்பேராசிரியரும் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவராதலால் இப்பெருமகனாரை சேலம் மாவட்ட ஆசிரியப் பெருமக்களுக்கு அறிமுகம் செய்து வைப்பதற்காகவே இவரை அழைத்தார் போலும். திரு. பி.ஆர் சுப்பிரமணியமும் ஆங்கிலத்தில் வல்லுநர்: அருந்தமிழ்க் காதலர். 1949 - ஏப்பிரலில் காரைக்குடிக் கம்பன் திருநாளைக் காண முதன் முதலாகச் சென்றேன். அப்போழுது (இரண்டு மாத இடைவெளிக்குள்) பேராசிரியர் இராகவனைச் சந்தித்து மகிழ்ந்தேன். இந்தத் திருநாளின் போது பல அன்பர்கள் அறிமுகமானார்கள். அவர்களுள் துTத்துக்குடி ஏ.சி. பால் நாடார் (வழக்குரைஞர்), தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான் (க .ெ ல க் ட ர்) கு. அருணாசலக் கவுண்டர் (பேராசிரியர்), எஸ். மகராசன் (அப்போது மாவட்ட முனிசீப்) மஞ்சுநாத் (சார் பதிவாளர்) தொ மு. சிதம்பர ரகுநாதன் (திரு. தொண்டைமானின் இளவல்) திரு ராய. சொக்கலிங்கன், திரு. சொ. முருகப்பா பேராசிரியர் ஆ. முத்துசிவன், திரு தெ.பொ. மீனாட்சி சுந்திரனார் ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள்: துரத்துக்குடி, திருநெல்வேலி நண்பர்களையெல்லாம் பேராசிரியர் இராகவன் அறிமுகம் செய்து வைத்தார். ஒன்றிரண்டு ஆண்டுகள் பேராசிரியர் அ. சீநிவாச ராகவன் துரத்துக்குடியில் வ. வு. சிதம்பரம் பிள்ளை அவர்கள் பெயரால் புதிதாகத் தொடங்கப் பெற்ற கல்லூரிக்கு முதல்வராக நியமனம் செய்யப்பெற்றார். இந்தப் பதவி ஏற்று ஒன்றிரண்டு ஆண்டுகளில் ஏற்கெனவே பெற்றுள்ள புகழ் காரணமாகச் சென்னைப் பல்கலைக் கழக ஆட்சிக் குழுவின் (Syndicate) உறுப்பின ராகவும் தேர்ந்தெடுக்கப்பெற்றார். இந்தப் பதவியில் தாம் ஒய்வுபெறும்வரை இருந்து வந்தார். ஆங்கிலப் பேராசிரியராக இருந்த இப்பெருமகனார் பலதமிழாசிரியர்