பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் அ. சீநிவாசராகவன் 2丢7 மூன்று முறை சென்னைப் பல்கலைக் கழகத்தில் நுழைய முயன்றேன். மூன்று முறையும் கிடைக்கும். போலிருந்தது; நழுவியது. இனி, சென்னைக்கு விண்ணப்பம் அனுப்புவதில்லை என்ற சூளுரையை எடுத்துக் கொண்டேன். இதனைப் பேராசிரியர் இராகவ னிடம் தெரிவித்தேன்; அவரும்என்துணிவுக்கு மகிழ்ந்தார். அவரும் வாழ்க்கையில் சிர்மப்பட்டவர். திரைமறைவில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை விவரமாக எடுத்துச் சொன் னார் பேராசிரியர் அ. சீநிவாசராகவன்.1960.டபிப்பிரவரி யில் 1954-இல் தொடங்கப்பெற்ற திருவேங்கடவன் பல்கலைக் கழகத்திற்கு முதன்முதலாகத் தமிழ் விரிவுரை யாளர் பதவி விளம்பரம் செய்யப் பெற்றிருந்தது, காரைக் குடியில் அப்போது பேராசிரியர் (Professor) பதவியில் இருந்தேன். அதனைத் துறந்து திருப்பதியில் சேர்வதெனத் தீர்மானித்து விண்ணப்பித்தேன். என் வாழ்வில் மூன்றாண்டுப் பருவத்தில் தந்தையை இழக்கச் செய்தான் ஆண்டவன். உதவிக்கும் ஆதரவாளர்கள் இல்லாமல் செய்தான். புகல்ஒன்று இல்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே!" என்று நினைக்கச் செய்தான். துணிவாக என்னிடம் வருக என்று சொல்வதுபோல் விண்ணப்பம் போடு' என்றும் பணித்தான். தமிழக அரசு தமிழ் வளர்ச்சிக்காக பிறமாநிலங்கட்கு வழங்கிவரும் நிதியைப் பெற்று தமிழை யும் வளர்க்கலாம் நானும் வளரலாம் என்று கருதியே திருப்பதி செல்லத் தீர்மானித்தேன், இங்கு எந்த விதத் தடையுமின்றி என்னை எடுத்துக் கொண்டார்கள். இதற்காக நடந்த பேட்டியின்போது நானும் குழுவிற்குச் சில வினாக்கள் விடுத்து என் நிலையை உறுதி செய்து கொண்டேன். பணி ஏற்ற பிறகு பேராசிரியர் இராகவ 1. திருவாய் 6.10:10