பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

荔泰莎 மலரும் நினைவுகள் லுக்கு எழுதினேன். அதற்கு அவரே தன் கைப்பட எழுதி கடிதத்தில், செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே நெடியானே! வேங்கடவா! நின்கோயி லின் வாசல் அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும் படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே.” என்ற குலசேகராழ்வார் பாசுரத்தை எழுதி இனி கவலை வேண்டா; வேங்கடன் அடியில் பெரும் புகழுடன் திகழ்வீர்கள்' என்று வாழ்த்தினார். திருப்பதி சென்ற பிறகும் திருவேங்கடவன் பத்து ஆண்டு கள் தமிழக மானியம் பெறமுடியாமல் தவிக்க வைத்தான். பதவி உயர்வில் ஒவ்வொரு நிலையிலும் பெரிய பெரிய தடைக் கற்களை இட்டு சொல்லொணாத் துன்பங்களை யும் விளைவித்தான். இவற்றைத் தாக்குப்பிடிக்கவல்ல மன வலியையும் அருளினான். சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம் சுடச்சுட நோற்கிற் பவர்க்கு." என்ற குறளுக்கு என்னையே எடுத்துக் காட்டாகக் கொண்டு விளக்கம் தந்தான் போலும் என்று இப்பொழுது சிந்திக்கின்றேன்.திருப்பதியில் என்னை வறுமையில் வாடச் செய்தாலும் என் மக்கட்கு நல்ல கல்வி பெறும் வாய்ப்பு கள் அளித்தான். எனக்கும் நல்ல உடல் நலத்தையும் மன வளத்தையும் நல்கி இன்றுவரை (6-11-1989) நோய் கொடியின்றி வைத்துத் தன்புகழை எழுத்து வடிவத்தில் 2. பெரு.திரு . 4:9 3. குறள். 267 (தவம்)