பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் அ. சீநிவாசராகவன் 249 தரச் செய்கின்றான். வாழ்விலும் தாழ்விலும் இன்பத் திலும் துன்பத்திலும் சம நிலையான மனத்தையும் நல்கி யுள்ளான். சித்தாந்த மொழியில் கூறினால் இருவினை யொப்பு, மலபரிபாகத்தை நல்கி போதுமென்ன மனமே பொன் செய்யும் மருந்து' என்ற பழமொழியின் உண்மை யையும் கடைப் பிடிக்கச் செய்து விட்டான். இதனையும் அவன் காட்டும் கருணையாகவே கொள்ளுகின்றேன். நான் காரைக்குடியில் தொடங்கி திருப்பதியில் முடித்த தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை என்ற நூலுக்கு ஆங்கிலத்தில் ஓர் அணித்துரை தருமாறு வேண்டினேன். பேராசிரியர் உவப்புடன் என் வேண்டு கோளை ஏற்று அணிந்துரை நல்கினார். அதிலுள்ள ஒரு பகுதி : “These chapters illustrate how learned writing can be stimulating even while, for the sake of precision and truth, it avoids mere sentiment and fancy. This work on Toikappiyam’ covers almost all aspects of that ancient classic. Its discussions are full, its analysis of “Tolkappiyam' and its commentators keen and learned and its judgements on the whole marked by restraint and balance. Prof. Reddiar has given us a patiently evolved and carefullyworded thesis on a recondite theme, one that will prove he ipful to all earnest students of Old Tamil Literature” - திருப்பதி தமிழ் இலக்கியம் நடையாடாத தேசமாகை யாலும், தமிழ் எழுதவும் படிக்கவும் வல்லவர்கள் அருகி விட்டதாலும் தமிழ் இலக்கியம்பற்றி ஓரளவாவது அறிந்து கொள்ள வாய்ப்பாக இருக்கட்டும் என்றே இப் பேராசிரியரிடம் ஆங்கில முகவுரை பெற்றேன்.