பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

塞喜鲁 மலரும் நினைவுகள் பேராசிரியர் அ. சீநிவாசராகவன் திருநெல்வேலி சீமையைச் சேர்ந்தவரான படியால் டி. கே.சியின் வட்டத் தொட்டியுடன் நிரம்பத் தொடர்பு கொண்டிருந்தார். ஒரு சில ஆண்டுகள் அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றியவர். பம்பாய் கல்கத்தா, டில்லி போன்ற இடங்களில் வாழும் தமிழர் களிடம் செல்வாக்கும் மதிப்பும் பெற்றுத் திகழ்ந்தவர். கம்பனையும் ஆழ்வார்களையும் கண்ணப்ப நாயனார் பன்றி இறைச்சியைச் சுவைத்து சுவைத்து இறைவனுக்குப் படைத்ததைப்போல இவரும் இந்த இலக்கியங்களைச் சுவைத்து சுவைத்துத் தமிழ் உலகத்திற்குத் தம் பேச்சாலும் எழுத்தாலும் வழங்கி மகிழ்வித்தவர். சில ஆண்டுகட்கு முன்னர் அவர் வெளியிட்ட காவிய அரங்கில் (பழநியப்பா பிரதர்ஸ், சென்னை, திருச்சி) என்ற ஒரு நூலைத் திரும்பத் திரும்பப் படித்துச் சுவைத்த துண்டு. யாரோ ஒருவர் வாங்கிப் போனார்; திரும்பத் தர வில்லை. கொடுத்த எனக்கு வாங்கினவர் பெயர் கூட மறந்த போது வாங்கினவர்க்குக் கொடுத்தவர் பெயர் எப்படி நினைவு இருக்கும்? பெரும்பாலும் இரவலாக நூலைப் பெற்றுப் போவார்கள்; அதைப் படிப்பதுமில்லை; வாங்கின நினைவும் இருப்பதில்லை; அந்த நூல் எங்கு போயிற்று? என்று தேடிப் பிடிக்கவும் முடியாத நிலையில் இருப்பவர்கள் சிலர். காவிய அரங்கில்' என்ற இந்நூல் கம்பன் காவிய அரங்கில் நடமாடும் சில் பாத்திரங்களைப் பற்றி அற்புதமாகத் திறனாய்ந்த கட்டுரைகளைக் கொண்டு இலங்குவது. ஆங்கில இலக்கியங்களையும் ஆங்கிலத் திறனாய்வு நூல்களையும் படித்து அவற்றில் தோய்ந்தவராதலால் அவற்றின் போக்கும், தமிழ் மரபிற். கேற்ற நெளிவு சுழிவுகளும் இந்த நூலில் பிரதிபலிப்பதைக் கண்டு மகிழலாம். இவர் தமிழ்ச் சொற்பொழிவுகளில் காணும் இனிமை, எளிமை, தெளிவு என்ற கூறுகளை